Happy Janmashtami 2018: பகவான் கிருஷ்ணன் குழந்தையாக பூமியில் அவதரித்த இந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுவது வழக்கம்.
Happy Janmashtami 2018 : வழிபாடு முறைகள் :
பகவான் கிருஷ்ணர் இரவு நேரத்தில் பிறந்த காரணத்தினாலேயே இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி, இரவு நேரத்தில் கொண்டாடப்படுகிறது. தீயச் சக்தியை ஒழித்து நன்மையை நிலைநாட்ட பூமியில் மனிதனாக தோன்றி தெய்வம் ஆனவர் கிருஷ்ணர்.
இவரின் இந்த பிறந்தநாளில், அனைவரும், பால், வெண்ணை, அவல், அப்பம், சீடை என பல பலகாரங்களை சமைத்து படைத்து கொண்டாடுவர். இத்தகை சிறப்பு வழிபாடு செய்வது எப்படி. என்ன தேவை? என்பதே இந்த செய்தி தொகுப்பு.
- வீடு முழுவதையும் மதியமே சுத்தம் செய்வது அவசியம்.
- நம் இல்லத்திற்குள் கண்ணனை வரவேற்கும் விதமாக அரிசி மாவை நீர் சேர்த்து அரைத்து மாக்கோலம் போல சிறிய பாதங்கள் போட வேண்டும்.
- பூஜை அரைக்குள்ளே அவரவர் வழிப்படும் கிருஷ்ணர் பொம்மை அல்லது படம் வைத்து பூக்களால் அலங்கரிக்கலாம்.
- கிருஷ்ணர் படம் அல்லது சிலைக்கு இரு புறமும் விளக்கு வைத்து எண்ணை ஊற்றி, திரி போட்டு வைக்க வேண்டும். முன்னால் ஒரு டட்டில், வெற்றிலை பாக்கு பழம் மற்ரும் தேங்காய் என தாம்புலம் தட்டு தயாரித்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு நல்ல நேரம் பார்த்து, நீங்கள் பூஜையை தொடங்கும் நேரத்தில், எண்ணை ஊற்றி வைத்த இரண்டு விளக்குகளையும் ஏற்றி, வாசலில் மாவிலையை மாலைப்போல் போடுங்கள்.
- நீங்கள் வழக்கமாக படிக்கும் விநாயகர் ஸ்லோகம் படித்து முடித்து, க்ருஷ்ணர் வழிபாடு சார்ந்த பாடல் அல்லது ஸ்தோத்திரங்கள் படித்து பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது.
- ஒருவேளை உங்களிடம் ஸ்லோகப் புத்தகம் எதுவும் இல்லையென்றாலோ அல்லது ஸ்லோகம் தெரியவில்லை என்றாலோ, ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற நாமத்தை குறைந்தது 11 முறையாவது கூறவேண்டும். 108 முறை கூறி புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால் நன்மைகள் உண்டாகும்.
- அர்ச்சனை முடிந்த பின்பு, கற்பூரம் காட்டி, பலகாரங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.
- தூபத்தை தொட்டு கும்பிட்டு, படைத்த பலகாரங்களை அருகில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு அதன் பிறகே நமது இல்லத்தினர் சாப்பிட வேண்டும்.
- தனது இல்லத்தில் பூஜையை முடித்த பிறகு அருகில் இருப்பவர்களுக்கு தாம்புலம் கொடுப்பது நல்லது.
- பின்னர் அருகில் கிருஷ்ணர் கோவில் ஏதேனும் இருந்தால் சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு.
இந்த சிறப்பு நாளில், உங்கள் இல்லங்களில் ஆன்மீகம் நிறைந்து, இறையருள் ஆசிர் பெற்று வாழ்வில் வெற்றிகளை தன்வசப்படுத்த இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாழ்த்துகிறது.