Kiss Day 2020 Quotest, Wishes : காதலர் தின வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவத்தை தந்து காதலின் மகத்துவத்தை, பேரன்பை, விட்டுக்கொடுக்காத ஒற்றுமை நிலையை கொண்டாடி வருகின்றார்கள். இதனை படிக்கும் 2K கிட்ஸ்க்கு ஒரு மாதிரியா இருந்தாலும் 90’s, 80’s – கிட்ஸ்களுக்கு காதலர் தினம் எப்படி ஒரு மகிழ்ச்சியான, த்ரில், திகில் மற்றும் உருக்கமான உணர்வுகளால் நிரம்பியது என்பது நன்றாகவே தெரியும். சிங்கிள்ஸ் தான் கெத்துன்னு சுத்துருவங்களுக்கு இந்த செய்தி கெடையாது பாஸ். நீங்க டேக் டைவர்ஸன்.
காதலர் தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது கிஸ் டே. இந்த நாளில் காதலர்கள் தங்கள் அன்பை அழகான அன்பிலும், முத்ததாலும் வெளிப்படுத்துவார்கள். தொலைதூரத்தில் இருக்கும் உங்களின் அன்பானவர்களுக்கு இந்த பக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை அனுப்பியும் கூட உங்களின் அன்பினையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்ளலாம்.
உங்கள் வாழ்வினை மாற்ற ஒருவர் வருவார். அந்த கணத்தில் எல்லாம் மாறிவிடும். உங்களின் மகிழ்ச்சியை தொலை தூரத்தில் இருந்து கொண்டு வரும் உங்களின் முகத்தில் தொலைந்து போன புன்னகையை மீட்டெடுக்க எதுவும் செய்வார். அன்பு செலுத்துதல் என்பதும் ஒரு வகையில் தவமாய் தான் இருக்க வேண்டும்.
எதிர்பார்ப்புகள் இல்லாமல், கோபங்கள், சண்டைகள், ஈகோவுக்கு இடம் தராமல் ஒருத்தருக்கு ஒருத்தர் என்றும் எப்போதும் ஆறுதலாய் உற்ற துணையாய் இருந்தால் போதாதா காதல் காதலர் தினத்தை தினமும் கொண்டாட.
காதலர் தினத்தில் அவர்களுக்கு அழகான கடிதம் ஒன்றை எழுதுங்கள். அவர்களை நீங்கள் எப்படி காதலிக்கின்றீர்கள் என எழுதுங்கள். அவர்களால் உங்கள் வாழ்க்கை எப்படி மாறியது என்று கூறுங்கள். சின்னச்சின்ன அர்த்தமுள்ள வார்த்தைகளும் உங்களின் எண்ணங்களை மகிழ்ச்சியில் கொண்டு போய் சேர்க்கும்.
அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள். தங்கத்தாலும் வைரத்தாலும் தான் அவை இருக்க வேண்டும் என்றும் இல்லை. ஒரு சாக்கலேட் போதும். ஒரு அழகான மலர் கொத்து போதும். வெளியே அழைத்துச் செல்லுங்கள். உணவகமோ கடற்கரையோ உங்கள் துணையை மகிழ்ச்சியாக்கும் சில தருணங்களை அவர்களின் நினைவுகளில் என்றும் நீங்காத வண்ணம் கொடுங்கள்.
ஒருவரின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பக்க பலமாய் உற்ற துணையாய் நீங்கள் நிற்கும் தருணங்கள் தான் உங்கள் காதலின் வலிமை கூட்டும். அனைவருக்கும் இனிய காதலர்கள் தின ‘கிஸ் டே’ வாழ்த்துகள். என்றும் மகிழ்ந்திருங்கள்!