Happy Merry Christmas 2024 Wishes, Images, Quotes, Status, Messages, கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் 2024: இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளை முன்னிட்டு ஆலயங்களில் துதி பாடி, இசையுடன் அன்பை பரிமாறிக் கொள்கிறோம். பல்வேறு வீடுகளில் கேக் தயாரித்து நமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிறோம். இந்த தருணத்தில் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்திருப்போம்.
இத்தகைய மகிழ்ச்சியான சூழலில் உங்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு அனுப்பி மகிழ்வதற்காகவே சிறப்பான கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன. இவற்றை உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.
* மக்களோடு மக்களாய் இருக்கும்
ஏசுவின் பிறந்த நாளினை
கொண்டாடுவோம்... அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
* கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
இயேசு பிறந்த நாளை மகிழ்ச்சியாய்
கொண்டாட என் இதயம் கனிந்த
கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்
* நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும்
அடையாளமாக விளங்கும்
இந்நன்னாளில் அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
* இந்த திருநாளில் உங்கள்
வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
*அன்பு ஒன்றே தெய்வம்
என்று அனைவரையும்
வாழ்க என்று வாழ்த்திடுவோம்
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்
*கிறிஸ்துமஸ் பண்டிகையின்
மகிழ்ச்சியும், அன்பும்
உங்கள் இல்லத்தில் நிறையட்டும்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“