ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை. இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!
நம் தாய்மார்கள் நம் மீது பொழியும் அன்புக்கும், நமக்காக அவர்கள் செய்யும் தியாகங்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாள் இது. அன்னையர் தினத்தன்று, நம் தாய்மார்களை கௌரவிக்கவும், அன்பை பொழியவும் சில வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், மெசஜேஸ், படங்கள் இங்கே உள்ளன.
கீழே பாருங்கள்

அனைத்து தினமும் அன்னைக்கான தினமே…
ஆனாலும் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் ஆதலால் அணைக்கும் அன்னையை என்றும் துணையாக,தூணாக இருக்கும் அன்னையை எந்நாளும் போல் இந்நாளும் கொண்டாடுவோம்…
அனைவருக்கும் அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள் …

உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
எல்லாம் சேர்ந்தவள் அன்னை!
அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள்

அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது
அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள்

பத்து மாதம் சுமந்தாய் வயிற்றில்,
பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில்,
இனி என்றுமே சுமக்க நினைக்கிறன்
என் நெஞ்சில் அம்மா.!
இனிய அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள்

நான் அழுத பொழுது என்னை சிரிக்க வைத்த முகம்..! என்றுமே என்னை வெறுக்காத குணம்..! தவறுகளை மன்னிக்கும் மனம்..! அளவு இல்லாத பாசம்..! மற்றவர்கள் காட்டிடாதே நேசம் உடையவள் தான் அம்மா.
அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள்

ஆயிரம் கவிதைகள் உனக்காக எழுதினேன் ஆனால், நீயோ அம்மா என்ற ஒரு வார்த்தை கவிதைக்குள் அனைத்தையும் அடக்கி கொண்டாய்.
அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள்!

ஆழ்கடலில் ஆழம் பெரிதா! நீண்டு நிற்கும் இமயம் பெரிதா! இல்லை, நீ காட்டும் பேரன்பே பெரியது என்பேன் நான் இவ்வுலகில் என்றும்.
அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள்…

அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”