Tamil Recipe News, Sarkarai pongal: இந்த 2021 புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்போம். இந்த புத்தாண்டை எல்லோரும் வீடுகளில் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் ரெசிப்பியுடனும் கொண்டாட திட்டமிட்டுள்ளீர்களா? புத்தாண்டைத் தொடர்ந்து தைப் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்கு முன்னோட்டாமாக புத்தாண்டு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க சுவையான சர்க்கரைப் பொங்கலுடன் கொண்டாடுங்கள்.
புத்தாண்டை இனிமையாக்க சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று ஐஇ தமிழ் செய்முறையுடன் அளிக்கிறது.
சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
1. அரிசி – 1 கப்
2. பாசிப்பயறு – 1/4 கப்
3.பால் – 4 கப்
4.வெல்லம் – 1 கப்
5.முந்திரி – 3 தேக்கரண்டி
6.உலர்திராட்சை – 3 தேக்கரண்டி
7.ஏலக்காய் – 5
8.நெய் – 1/4 கப்
9.தேங்காய் – 1/2 கப்
ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை பொங்கல் செய்முறை:
1.முதலில் ஊறவைத்த அரிசியுடன், பாசிப் பயறு சேர்த்து பாலில் வேகவைக்க வேண்டும்.
2. நெய், வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து குறைந்த தீயில் நன்றாக கிளற வேண்டும்.
3.பின்னர், மற்றொரு வானலியில் நெய்விட்டு முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து, வேகவைத்த அரிசிக் கலவையுடன் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சூடான சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி. இப்போது சுவையான சர்க்கரை பொங்கலுடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் பறிமாறி கொண்டாடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"