Advertisment

Happy New Year 2025: இதை யோசிச்சு பாத்தீங்களா? ஜனவரி 1-ஐ ஏன் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்?

உலகம் முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடுகின்றனர். ஆனால், எதற்காக ஜனவரி 1-ஆம் தேதியன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா?

author-image
WebDesk
New Update
New year 2025

Happy New Year 2025 Wishes

Happy New Year 2025: இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி உள்ளனர்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Happy New Year 2025: Know the history, significance, and why do we celebrate New Year’s on January 1?

 

Advertisment
Advertisement

உலக அளவில் ஜனவரி 1-ஆம் தேதியன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை எதிர்பார்த்து புதிய கனவுகள் மற்றும் குறிக்கோளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு நொடியும் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களை காண எல்லோரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

பட்டாசு வெடிப்பதில் தொடங்கி, நமக்கு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து டின்னர் சாப்பிடுவது என தங்களுக்கு விருப்பமான விதத்தில் மக்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

அதன்படி, 2025-ஆம் ஆண்டு நாளை பிறக்கிறது. இன்று இரவு முதலே பலரும் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். இந்த தருணத்தில் புத்தாண்டு எதற்காக ஜனவரி 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா?

வரலாற்றில் பின்னோக்கிச் சென்று பார்த்தால், கிமு 45 - 46 காலகட்டத்தில், ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீஸர், ஜூலியன் காலண்டரை நிறுவினார்.

ரோமானியர்களின் செல்வாக்கு மற்றும் கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டதன் காரணமாக ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடப்படுகிறது.

இதிகாசங்களின் அடிப்படையில் ஜானஸுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று கடந்த காலத்தை பிரதிபலிக்கும்; மற்றொன்று எதிர்காலத்தை வெளிப்படுத்தும்.

எனினும், ரோமானியர்கள் மட்டுமே புத்தாண்டை கொண்டாடவில்லை. பண்டைய பாபிலோனியர்கள், மார்ச் மாதத்தில் புத்தாண்டை கொண்டாடினர். புதுப்பித்தல் மற்றும் மறுபிறப்பைக் குறிக்கும் விதமாக புத்தாண்டை அவர்கள் கொண்டாடினர்.

நிகழ் காலத்திலும் கூட, மக்கள் தங்கள் பாரம்பரியத்தின் படி புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

New Year Party Happy New Year
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment