Happy New Year 2025 Wishes, Images, Quotes, Status, Captions, புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025: புத்தாண்டு பிறப்பதற்கு சில மணி நேரங்களே மீதமிருக்கிறது. நம் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அன்பிற்குரியவர்கள் என நமக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து புத்தாண்டை கொண்டாட வேண்டும் என நாம் விரும்புவோம்.
எனினும், சந்தர்ப்ப வசத்தால் நமது பாசமிகு உறவுகளிடமிருந்து பிரிந்து வேறு ஒரு இடத்தில் வசிக்கக் கூடிய நிலை பலருக்கும் இருக்கிறது. அவர்கள் அனைவரும் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து செய்திகள், வாழ்த்து அட்டை புகைப்படங்களை பகிர்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள்.
அந்த வகையில், உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு நீங்கள் பகிர்ந்து மகிழக் கூடிய புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் புகைப்படங்கள் இந்தப் பதிவில் இருக்கின்றன. அவற்றைக் காணலாம்.
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி
நிறைந்ததாக அமைய
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோருடைய வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும்
தடைக் கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
மாறுவது மாறிப்போகட்டும்
மாறாதது நம் அன்பாக இருக்கட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இந்தப் புத்தாண்டு உங்கள்
வாழ்வில் எல்லா நன்மைகளையும்
கொண்டு வரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பழையவை மறப்போம்
புதியவை புகுவோம்
கவலையை மறப்போம்
புத்தாண்டு வாழ்த்துகள்