/tamil-ie/media/media_files/uploads/2019/01/Pongal-Holidays.jpg)
Pongal 2019 Wishes in Tamil:பொங்கல் வாழ்த்துகள், Happy Pongal Greetings
Happy Pongal 2019 Wishes, Images, Greetings in Tamil: பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என்கிற பெருமை கொண்டது. உழவுத் தொழிலுக்கு விழா எடுக்கும் தமிழர்களின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவது. இந்த விழாவில் அனைவரும் புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு வழிபாடுகளை நடத்துவதுடன், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறுவது வழக்கம். உங்கள் இதயம் கவர்ந்தவர்களுடன் வாழ்த்துகளை பறிமாற சில அட்டைகள் இங்கே..
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதனை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் போகிப்பண்டிகை, கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான போகிப்பண்டிகை, ஜன.14 அன்று கொண்டாடப்படுகிறது.
Pongal Festival: தமிழர் போற்றும் திருநாள் தைப் பொங்கல்
போகியைத் தொடர்ந்து, பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று தொடர்ச்சியாக நீண்ட விடுமுறையை ஏகபோகமாக கொண்டாட அனைவரும் தயாராகிவிட்டார்கள்.
உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை அனுப்பி அன்பை பரிமாறுங்கள்.
வாழ்த்துப் படங்களை அனுப்பும் போது, போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களையும் பிளாஸ்டிக் பொருட்களையும் யாரும் தீ வைத்து கொளுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலையும் சேர்த்து அனுப்புங்கள்.
நாடும், மக்களும் வளம் பெறட்டும்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.