தமிழர் திருநாளாம் பொங்கல்… வாழ்த்து சொல்ல நீங்க தயாரா?

happy pongal 2021 : பேஸ்ஃபுக் மெசெஞ்சர்கள் மூலம் எளிமையாக இன்று அனைவருக்கும் வாழ்த்து கூறிவிட இயலும்.

By: January 13, 2021, 11:41:47 AM

happy pongal 2021 happy thai pongal wishes : பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என்கிற பெருமை கொண்டது. உழவுத் தொழிலுக்கு விழா எடுக்கும் தமிழர்களின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவது.

முதல் நாள் தைப் பொங்கல், இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல். உங்கள் அனைவருக்கும் எந்த பொங்கல் மிகவும் விருப்பமான பொங்கல்? அனைவரும் பழைய பிற்போக்கு சிந்தனைகளும் எண்ணங்களும் நீங்கி, புதிய நல்லெண்ணெங்கள் உருவாகிட வேண்டிக் கொள்வோம்.

இந்த வாழ்த்து அட்டைகளை நீங்கள் டவுன்லோடு செய்து உங்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அனுப்பி மகிழ்ந்திடுங்கள். வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்ஃபுக் மெசெஞ்சர்கள் மூலம் எளிமையாக இன்று அனைவருக்கும் வாழ்த்து கூறிவிட இயலும்.

உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! நமக்கு எப்போதும் வாழ்த்துகள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் முன்பு போல நம்மால் கார்டுகளை வாங்கி நேரில் சென்று வாழ்த்து சொல்ல இயலுவதில்லை. அவர்களுக்காகவே இந்த பக்கம். இங்கு இருக்கும் இந்த வாட்ஸ்ஆப் இமேஜ்களை டவுன்லோடு செய்து உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு நீங்கள் அனுப்பிக் கொள்ளலாம்.

போகியைத் தொடர்ந்து, பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று தொடர்ச்சியாக நீண்ட விடுமுறையை ஏகபோகமாக கொண்டாட அனைவரும் தயாராகிவிட்டார்கள்.

 

Pongal GIF - Pongal GIFs

Pettagifs Sunpictures GIF - Pettagifs Sunpictures PettaGif GIFs

 

Ha Pp YPongal2019 Viswasam GIF - HaPpYPongal2019 Pongal 2019 GIFs

Image result for pongal wish gif

உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை அனுப்பி அன்பை பரிமாறுங்கள்.வீட்டில் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடுங்கள். எங்களின் வாழ்த்துகளையும் மனதார ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு நீங்கள் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து மகிழுங்கள்.

சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும், உழவர்கள் நன்றி சொல்ல, நமக்கு மூன்று நேர உணவிற்கும் உத்திரவாதம் அளிக்கும் விவசாயிகளுக்கு நாம் இன்று நன்றி செலுத்துவோம். அவர்கள் எந்த சிரமும் இன்றி விவசாயத்தை பேணி பாதுகாத்திட நாம் எந்நாளும் அவர்களுக்கு உறுதுணையாய் நின்றிடுவோம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Happy pongal 2021 happy thai pongal wishes 2021 pongal whatsapp wishes messages

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X