Happy Pongal 2021 Wishes Images, Quotes, Status, Messages, Photos: ஜனவரி 14 தை முதல் பொங்கல் திருநாளில் உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைத்தெரிவிக்க அழகான புகைப்படங்கள், உத்வேகத்தை தூண்டும் வாசகங்கள், வாழ்த்துச் செய்திகளை அனுப்ப வேண்டும் என்று விரும்புகிறீர்களா உங்களுக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சிறப்பு பொங்கல் வாழ்த்து புகைப்படங்களையும் வாசகங்களையும் இங்கே அளித்துள்ளது.
தை பிறந்தாள் வழி பிறகும் என்பது தமிழ் மக்களின் பாரம்பரியமான நம்பிக்கை. அறுவடைத் திருநாள் என்றும் தமிழர் திருநாள் என்றும் விவசாயிகளுக்கு உதவு கால்நடைகளை கௌரவப்படுத்தும் விதமாக் மாட்டுப் பொங்கலும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இதே பொங்கல் பண்டியைத்தான் இந்தியா முழுவதும் மகர சங்காராந்தி என்று கொண்டாடுகின்றனர். ஆனாலும், தமிழகத்தில்தான், எல்லா வீடுகளிலும் வாசலில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து மகிழ்கின்றனர்.
தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் கொண்டாட்டமான பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளில் அனைவரும் இந்த தொற்றுநோயை கடப்பதற்கு வழிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். பொங்கல் வாழ்த்து தெரிவிக்க நல்ல அழகான புகைப்படங்கள், வாசகங்கள், வாழ்த்துச் செய்திகளை தேடுகிறீர்களா உங்களுக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இங்கே அளிக்கிறது.