தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டத் தொடங்கி உள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படும். நாளை (ஜனவரி 15) தைப் பொங்கல் கொண்டாடப்படும். நாளை மறுநாள் (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகை புத்தாடை உடுத்தி பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடப்படும். புத்தாடை உடுத்தி, கோயில் சென்று வழிபாடு செய்து, சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடப்படும்.
Advertisment
மண்பானையில் பொங்கல் வைத்து, அதில் மஞ்சள் கொத்து கட்டப்படும். வீடுகளில் அழகான வண்ண கோலம் போடப்படும். குழந்தைகள் கரும்பு உண்டு மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பண்டிகை, 2-ம் நாள் தைப்பொங்கல், 3-வது நாள் மாட்டுப் பொங்கல், 4-வது நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படும். இந்த இனிய நாளில் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் வாழ்த்து அட்டை அனுப்பி பொங்கல் பண்டிகையை மேலும் அழகாக்குங்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வண்ணமயமான கோலங்கள், இனிப்புகளுடன் இந்த நாளை அழகாக்குங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த பொங்கல் பண்டிகை உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பட்டும். பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அறுவடைத் திருநாளில் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடுங்கள்.
இந்த இனிய பொங்கல் திருநாளில் உங்கள் வாழ்வில் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/