New Update
00:00
/ 00:00
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜன.14) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழர் திருநாள், அறுவடைத் திருவிழா எனப் பொங்கல் பண்டிகை அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 14 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.
தமிழ் சூரிய நாட்காட்டியின்படி, தை மாதத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது மற்றும் பண்டிகை சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிய பயணமான உத்தராயணத்தின் தொடக்கத்தையும் இது குறிக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் 4 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்படும்.
முதல் நாள் போகி பண்டிகை என்று அழைக்கப்படுகிறது; இரண்டாவது நாள் தைப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது, இது மிக முக்கியமான நாள்; மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்; நான்காம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து அனுப்ப அழகிய புகைப்படங்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அறுவடைத் திருநாள் பண்டிகை உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஏராளமான மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரட்டும்.
இனிய பொங்கல் வாழ்த்துகள் . அறுவடை காலம் ஒளி மற்றும் மகிழ்ச்சிக்கான கதவைத் திறந்து, உங்கள் வாழ்க்கையிலிருந்து எல்லா பிரச்சனைகளையும் நீகட்டும்.
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புடன் அருள்புரிவானாக. பொங்கல் ஓ பொங்கல் வாழ்த்துகள்.
இந்த மகிழ்ச்சிகரமான பொங்கல் நாளில், உங்களுக்கு என்றென்றும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியமும் நிலைத்திருக்கட்டும் .
சூரியக் கடவுள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் உங்களுக்கு வழங்கட்டும்.
பொங்கல் ஓ பொங்கல். உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.