Advertisment

Tamil Puthandu 2024: தமிழ் புத்தாண்டு தேதி, வரலாறு, முக்கியத்துவம் என்ன?

சித்திரை (சைத்ர) மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Happy Puthandu 2024

Happy Puthandu 2024: Date, history, significance all you need to know about Tamil New Year

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil New Year 2024, Puthandu Date: இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

தமிழ் நாள்காட்டியில் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இது வழக்கமாக ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வருகிறது.

கேரளம், மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களிலும், நேபாளம், பர்மா, இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும் சித்திரை மாதத்தில்தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள் 6 மணி நேரம் 11 நிமிடம் 41 நொடிகள் ஆகின்றன. இதுவே தமிழ் வருடத்திலும் கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு மீன ராசியில் இருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.

ஆகவே, தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே தமிழ் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

புத்தாண்டு 2024: தேதி மற்றும் வரலாறு

தமிழ் புத்தாண்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

த்தாண்டின் வேர்கள் பழங்கால தமிழ்நாட்டைக் குறிப்பிடும் கிமு இரண்டாம் நூற்றாண்டின் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

புத்தாண்டின் தோற்றத்தை பண்டைய தமிழர் வரலாற்றில் இருந்து அறியலாம்.

சித்திரை (சைத்ர) மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இது புதிய தொடக்கங்களுக்கு மிகவும் நல்ல நேரமாக அமைந்தது.

இந்த நாளில், சிவபெருமான் தாண்டவம் எனப்படும் தனது பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்தினார், இது படைப்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது. எனவே புத்தாண்டு புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும்.

புத்தாண்டு 2024: முக்கியத்துவம் மற்றும் வழிபாடு

சித்திரை மாதம் தமிழர் புத்தாண்டுக்கு முந்தைய நாட்களில் வீடு வாசலை சுத்தம் செய்வதிலும் அலங்கரிப்பதும், தலைவாசலில் மா,பலா, வாழை ஆகிய முக்கனிகளில் அலங்கரிக்கின்றனர்.

புத்தாண்டு வழிபாட்டில் வாசனை மிகுந்த மலர்கள், வெற்றிலை, பாக்கு, பொன்னால் ஆபரணங்கள், நெல் முதலான மங்கலப் பொருள்கள் வைத்த தட்டை வழிபாட்டு அறையில் வைத்து அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாக கருதப்படுகிறது.

புத்தாண்டு அன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளித்து புத்தாடை அணிந்து புது வருஷ அறுசுவை பச்சடி செய்வதிலிருந்து நாள் ஆரம்பிக்கிறது.

மாங்காய் பச்சடி புது வருடத்தின் சிறப்பு அங்கம் என்பது நாம் அறிந்ததே. மாங்காயின் புளிப்போடு சேர்ந்த துவர்ப்பும், வெல்லத்தின் இனிப்பும், வேப்பம்பூவின் கசப்பும், மிளகாயின் காரமும் சேர்ந்த பச்சடி வாழ்வின் பல சுவைகளை நினைவுறுத்தும் வண்ணமாக அமைகிறது.

வருடத்தின் முதல் நாள் போலவே அனைத்து நாட்களும் அறுசுவை நிரம்ப வேண்டும் என்பதற்காகவே இது கடைப்பிடிக்கப்படுகிறது.

Read in English: Happy Puthandu 2024: Date, history, significance all you need to know about Tamil New Year

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment