Advertisment

Republic Day 2025 Wishes: நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழ தேசப்பற்றை உணர்த்தும் குடியரசு தின வாழ்த்துகள் இதோ!

நாட்டின் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழக் கூடிய வாழ்த்துச் செய்திகளை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Republic day Wishes

Happy Republic Day 2025 Wishes

Happy Republic Day 2025 Wishes, Images, Quotes, Status, Captions, இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 2025: நம் தேசம் தனது 76-வது குடியரசு தினத்தை இன்றைய தினம் கொண்டாடுகிறது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அரசியலமைப்பை செயல்படுத்தியதைக் குறிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் 'தங்க இந்தியா: பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி' என்ற கருப்பொருளுடன் குடியரசு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவின் வளமான மரபுகள் மற்றும் நம்பிக்கைகளை முன்னிலைப்படுத்தும் விதமாக இந்த கருப்பொருள் அமைந்துள்ளது. 

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Happy Republic Day 2025: Wishes Images, Quotes, Status, Photos, WhatsApp Messages, and greetings

 

Advertisment
Advertisement

இந்தியாவின் ஜனநாயக உணர்வு மற்றும் அரசியலமைப்பை பறைசாற்றும் விதமாக உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழக் கூடிய குடியரசு தின வாழ்த்து செய்திகள் மற்றும் வாழ்த்து அட்டைகளை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.

 

Republic 1

 

அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம்… குடியரசு தின நல்வாழ்த்துகள்.

 

Republic 2

 

வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என உறுதிமொழி ஏற்போம்… குடியரசு தின வாழ்த்துகள்.

 

Republic 3

 

எத்தனை மொழி, எத்தனை மதம், எத்தனை பிரிவுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பாரத்தாயின் பிள்ளைகள் தான். வாழ்க மக்கள் வளர்க பாரதம்… குடியரசு தின நல்வாழ்த்துகள்.

 

Republic 4

 

இந்த குடியரசு தினத்தில் நம் நாடு செழித்து பிரகாசிக்கட்டும். சக இந்தியர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

 

Republic 5

 

குடியரசு தினத்தன்று நம் நாட்டின் பொன்னான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை நினைவில் கொள்வோம். இந்த நாளில் நம் தேசத்தை பற்றி பெருமைப்படுவோம்… குடியரசு தின வாழ்த்துகள்.

 

Republic 6

 

இந்த குடியரசு தினத்தில் பெருமைமிக்க இந்தியர்களாக ஒன்று கூடி தேசத்தின் மகத்தான வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்போம்.

 

Republic 7

 

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்! நமது தேசம் தொடர்ந்து முன்னேறி உலக நம்பிக்கைக்கான கலங்கரை விளக்கமாக நிற்கட்டும்.

Constitution Of India Republic Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment