New Update
/indian-express-tamil/media/media_files/ap-1.jpg)
2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில், சரஸ்வதி பூஜைக்கு மற்றவர்களுக்கு இந்த வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.
2024-ம் ஆண்டு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நாளை, அக்டோபர் 11 தேதியும், விஜயதசமி அக்டோபர் 12 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில், சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை நண்பர்கள் மற்றும் பிறருக்கு இந்த வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்தியில் 9வது நாளாக சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நந்நாளில், தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும் வீட்டில் படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வது பூஜை என்று கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜையின் முப்பெரும் தேவிகளை கும்பிடும்போது வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் பெற்றிட முடியும். நவராத்தி தினத்தின் முதல் நாட்கள் வீரத்தின் அடையாளமாக இருக்கும் துர்க்கை அம்மனையும், 2-வது 3 நாட்கள், செல்வத்தின் அடையளமாக இருக்கும் மகாலட்சுமியையும் வணங்குவார்கள்.
அதேபோல் கடைசி 3 நாளில், கல்வி, வேலை, கலை பண்பாடு ஆகியவற்றின் அடையாளமாக இருக்கும் சரஸ்வதி தேவியை வணங்குவார்கள். இந்த நாளில், தொழில் செய்வோர் தங்களது ஆயுதங்களை கடவுளின் அருகில் வைத்து பூஜை செய்வார்கள். அதேபோல் படிக்கும் மாணவர்கள் தங்களது புத்தங்களை வைத்து பூஜை செய்வார்கள்.
இந்நிலையில் இந்த நாளில் நமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்தியை அனுப்பி மகிழ்வோம். கீழே உள்ள வண்ணப்படங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.