Advertisment

கோவையில் நீண்ட நாட்கள் கழித்து நடைபெற்ற 'Happy Street’ நிகழ்ச்சி: மக்கள் உற்சாகம்

நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் இப்பகுதியில் ("Happy Street") நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இதில் கலந்து கொண்டவர்கள் தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
'Happy Street’ நிகழ்ச்சி

'Happy Street’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் ("Happy Street") நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

அதே போல் சாய்பாபா காலனி என்.எஸ் ஆர்.சாலையிலும்  நடைபெற்று வந்த ("Happy Street") நிகழ்ச்சி பல மாதங்கள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் அதே பகுதியில்  நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு ஆடல் பாடல்கள் என உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் பல்வேறு பொதுமக்கள் அவர்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் இப்பகுதியில் ("Happy Street") நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இதில் கலந்து கொண்டவர்கள் தகவல்  தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment