இன்று காதலர் தினம். காதலை வெளிப்படுத்தும் ஒரு நாள். உலகெங்கிலும் உள்ள காதல் ஜோடிகள்’ ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவதற்கும், பரிசுகள், சாக்லேட்டுகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் காத்திருக்கிறார்கள்.
காதலிப்பவர்கள் மட்டுமல்ல, தம்பதியரும் கூட தற்போது காதலர் தினத்தை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள்.
கி.பி 270 இல் பிப்ரவரி நடுப்பகுதியில் மறைந்த புனித வாலண்டைன் இறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது என்று வரலாறு கூறுகிறது. லூபர்காலியா பண்டிகைக்கு மதத் திருப்பம் சேர்க்கும் முயற்சியாக இந்த நாள் கொண்டாடப்பட்டது என்றும் பலர் நம்புகின்றனர்.
காதலர் தினத்தில் உங்கள் துணைக்கு எப்படி வாழ்த்து சொல்வது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், உங்களுக்காகவே சில காதலர் தின வாழ்த்துகள், படங்கள் மற்றும் ஸ்டேட்டஸ் இங்கே..
*இப்பொழுதும் என்றென்றும் உங்களுடன் மட்டுமே இருப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். காதலர் தின வாழ்த்துக்கள்!

*உங்கள் புன்னகை எதற்கும் உயிர் கொடுப்பது போல, உங்கள் அன்பு என்னை உயிருடன் வைத்திருக்கிறது. காதலர் தின வாழ்த்துக்கள்!

*What this love is? An undefined emotion that all want to define. Happy Valentine’s Day darling!

*நீங்கள் இல்லாமல் வாழ்க்கை இவ்வளவு அழகாக இருந்திருக்காது. காதலர் தின வாழ்த்துக்கள்!

*உங்களுடன் ஒவ்வொரு நாளும் அழகானது, ஒவ்வொரு கணமும் சிறப்பு. காதலர் தின வாழ்த்துக்கள்!

*உன்னை நேசிப்பது என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றியது. எனது எல்லா குறைபாடுகளுடனும் என்னை நேசித்ததற்கு நன்றி. காதலர் தின வாழ்த்துக்கள்!

Happy Valentine’s Day!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“