Happy Valentine’s Day 2021 Wishes photos images messages status: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அன்பை பரிமாறிக்கொண்டு காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இனிய காதலர் தினம் வாழ்த்துகளைப் பகிர்ந்துக்கொள்ள உங்களுக்காக இங்கே அழகிய புகைப்படங்கள், வாசகங்கள், ஸ்டேட்டஸ்கள் வழங்குகிறோம்.
Valentine’s Day பொதுவாக காதலர் தினம் என்று அழைக்கப்படுகிறது. காதலர் தினம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் சிவப்பு ரோஜாக்கள் மற்றும் பலூன்கள் மனதில் வந்து போகின்றன. காதலர் தினம், காதலிப்பவர்களாலும், காதலை வெளிப்படுத்த விரும்புபவர்களாலும் தம்பதிகளாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கி.பி 270-ல் பிப்ரவரி 14ம் தேதி காலமான புனித வேலண்டைன் இறந்த ஆண்டைக் குறிக்கும் வகையில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என்று கதைகள் கூறுகின்றன. லுபர்காலியா திருவிழாவிற்கு ஒரு மத திருப்பத்தை சேர்க்க திருச்சபையின் முயற்சியாக இந்த நாள் கொண்டாடப்பட்டது என்றும் பலர் நம்புகிறார்கள்.
எப்படியானாலும், இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் மற்றும் ரொமாண்டிக்கான வாசகங்களை அனுப்ப இங்கே பாருங்கள்:
”எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள் அல்ல,
உண்மையான காதலைக் கண்டுபிடிக்க…
நான் ஒரு அதிர்ஷ்டசாலி,
ஏனென்றால், நான் உங்கள் மீது காதல்கொண்டுள்ளேன்…
அன்பும் ஆசீர்வாதங்களும் நிறைந்த
நித்தியம் வரை ஒரு பயணத்தைத் தொடங்குவோம்.
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!”
”காதலர் தினத்தை கொண்டாடுவதில் மிகச் சிறந்த பகுதி என்னவென்றால்,
உங்களுக்கான எனது எல்லா அன்பையும் வெளிப்படுத்த
இது எனக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது!
நான் உன்னை காதலிக்கிறேன்!
நான் ஒவ்வொரு நாளும் இன்னும் கொஞ்சம் அதிகமாக உன்னை காதலிக்கிறேன்.”
சிறந்த காதலர் தின செய்திகள்:
”நான் உன்னை ஒரு முறை காதலித்தேன்
நான் உன்னை இன்னும் காதலிக்கிறேன்…
நான் எப்போதும் உன்னை காதலிக்கிறேன்…
நான் எப்போதும் உன்னை காதலிப்பேன்…
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!”
”உனது காதலால் அன்பின் பயணம் சுவாரஸ்யமானது.
நான் உன்னை நேசிக்கிறேன்.
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!”