Happy Vinayagar Chaturthi 2021 Wishes, Images, Quotes, Whatsapp Messages, Photos, and Status: விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் விநாயகப் பெருமானின் பிறப்பு கொண்டாடப்படுகிறது. ஞானம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படும் விநாயகப் பெருமானுக்கு 108 பெயர்கள் உள்ளன. ஒருமுறை அவருடைய தாயார் பார்வதி தேவி, குளித்தபோது விநாயகப் பெருமானிடம் நுழைவாயிலைக் காக்கும்படி கேட்டதாக புராணங்கள் கூறுகின்றன. அந்த நேரத்தில், அங்கே சிவபெருமான் வந்தார். பார்வதி தேவி குளித்துக்கொண்டிருந்தது சிவபெருமான் உள்ளே நுழைய முயன்றபோது விநாயகர் தடுத்தார். இதனால், கோபமடைந்த சிவன், அவர் விநாயகரின் தலையை துண்டித்தார். இதைக் கண்ட பார்வதி தேவி மனம் உடைந்தார். பார்வதி தேவி திரும்ப விநாயகரை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என கேட்கிறார். சிவனின் திரிசூலத்தால் துண்டிக்கப்பட்டது மீண்டும் பொருத்த முடியாது என்பதால், விநாயகரின் துண்டிக்கப்பட்ட தலைக்கு பதிலாக ஒரு உயிரினத்தின் தலையைத் கொண்டுவரும்படி சிவபெருமான் தனது பூதகணங்களுக்கு அறிவுறுத்தினார். அவர்கள் ஒரு குட்டி யானையின் தலையைக் கொண்டுவந்தனர். யானை தலை வைக்கப்பட்டு, விநாயகர் மீண்டும் உயிர்பெற்றார். பின்னர், சிவபெருமானால் கணபதி என்று அழைக்கப்பட்டார்.
விநாயகர் நண்பகலில் பிறந்தார் என்று நம்பப்படுகிறது/ அதனால்தான், வேத ஜோதிடத்தின் படி விநாயகர் பூஜை செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் மத்தியானம் ஆகும். இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 22 முதல் தொடங்கிவிட்டன.
விநாயகர் சதுர்த்தி நாளில் இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் உங்களுடைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சில வாழ்த்து செய்திகள் மற்றும் மேற்கோள்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

*ஒரு புதிய சூரியோதயம், ஒரு புதிய ஆரம்பம் மலரட்டும்…
விநாயக பெருமானே என்னை உங்கள் அன்புக்குரியவராக வைத்திருங்கள்… இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

*இந்த விநாயகர் சதுர்த்தியில் நம்பிக்கையுடன் இருங்கள்.
இந்த விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டின் நல்ல தொடக்கமாக இருக்கும்… உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்…

*கணபதி பாப்பா மோரியா! மங்கள் மூர்த்தி மோர்யா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

*விநாயகப் பெருமான் அனைத்து தடைகளையும் நீக்கி உங்களுக்கு அருள் பொழியட்டும்.

*இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”