10 ரூபாய் போதும்… 10 நிமிடத்தில் பாத்ரூம் கறையை நீக்கலாம்; இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!
உங்கள் பாத்ரூமில் படிந்துள்ள பிடிவாதமான கரைகளை, வெறும் ரூ.5 செலவில் வீட்டிலேயே தயாரிக்கும் லிக்விட் மூலம் எப்படி போக்கலாம் என்று தெரியுமா? இந்த அற்புதமான ரகசியம், உங்கள் பாத்ரூமைப் புதிதுபோல் மின்ன வைக்கும்.

Advertisment
பாத்ரூமில் படிந்திருக்கும் உப்புக்கறை நாளடைவில் கருப்பாக மாறி, பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். இந்த கரைகளைப் போக்க பலரும் நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பார்கள். ஆனால், இனி அதற்கெல்லாம் அவசியமில்லை. கத்தியால் சுரண்டவோ அல்லது கைகளில் வலி எடுக்கத் தேய்க்கவோ தேவையில்லை. ஒரு சிம்பிள் லிக்விட் போதும். இந்த மேஜிக் லிக்விட் தயாரிக்க உங்களுக்குத் தேவைப்படும் பொருட்கள்
சீயக்காய் தூள்: கார்த்திகா சீயக்காய் தூள் அல்லது எந்த சீயக்காய் தூளாக இருந்தாலும் சரி, அல்லது வீட்டிலேயே அரைத்த சீயக்காய் தூளாக இருந்தாலும் சரி, இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். ஷாம்பு, எந்த பிராண்ட் ஷாம்பூவின் ஒரு பாக்கெட் (ரூ. 1 ஷாம்பு பாக்கெட் போதும்). புளித்த தயிர்/மாவு: 2 அல்லது 3 நாட்கள் வெளியிலேயே வைத்து புளிக்க வைத்த தயிர் (அல்லது) தோசைக்கு அரைத்து வைத்த புளித்த மாவு.
ஒரு பவுலில் சீயக்காய் தூள், ஷாம்பு, மற்றும் புளித்த தயிர்/மாவு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து, கெட்டியான லிக்விட் பதத்திற்கு நன்கு கலக்க வேண்டும். அவ்வளவுதான்! உங்கள் குளியலறை சுத்தம் செய்யும் லிக்விட் தயார்!
Advertisment
Advertisements
இந்த லிக்விட்டை ஸ்டீல் ஸ்க்ரப்பர் அல்லது வேறு ஏதேனும் ஸ்க்ரப்பரில் தொட்டு, உப்புக்கறை படிந்த இடங்களில் தேய்க்கவும். அதிகமாக அழுத்தித் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. மென்மையாகத் தேய்த்தாலே போதும், இரண்டு நிமிடங்களிலேயே அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும். வாஷ் செய்த பிறகு, மற்ற டைல்ஸ்களுடன் ஒப்பிடும்போது, நாம் தேய்த்த இரண்டு டைல்ஸ்கள் எந்த அளவுக்குப் புதிதுபோல் பளிச்சென்று இருக்கு என்று உங்களுக்கே தெரியும். தேவைப்பட்டால், லிக்விட்டை தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு, பின்னர் தேய்க்கலாம். இது மேலும் எளிதாக அழுக்குகளை நீக்கும்.