New Update
00:00
/ 00:00
ஹாவர்டில் உள்ள பயிற்சி பெற்ற மனநல மருத்துவர்கள் மற்றும் ஊட்டசத்து நிபுணர்கள் சேர்த்து மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான காலை உணவு தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் அதிகம் சர்க்கரை, கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் நமது ரத்த சர்க்கரையை அதிகரித்து, பிரேன் ஃபாக் அல்லது கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.
காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீருடன் காலையை தொடங்கினால், வரட்சி ஏற்படாது. மேலும் மன அழுத்தம் குறையும். இந்நிலையில் நாம் தெரிந்துகொள்ள உள்ள காலை உணவுகளின் பட்டியல் நமக்கு தேவையான சக்தி, சிந்தனையில் தெளிவு, ஒட்டுமொத்தமாக மனநலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
சியா புட்டிங்
சீயா விதைகளில் ஓமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. ஓமேகா 3 பேட்டி ஆசிடில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளன. இதை நாம் சாப்பிடுவதால், நமது சிந்தனை மண்டலம் சரியாக வேலை செய்யும். மன அழுத்தத்தை குறைக்கும். நமது மனநிலையை சீராக்கும். இதில் அதிக நார்சத்து உள்ளது. இதில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னிஷியம் உள்ளது.
முட்டைகள்
நாம் முட்டையை அவித்து அல்லது உடைத்து அதில் ஆம்லேட் போல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் பி5, பி12, வைட்டமின் டி, வைட்டமின் ஏ, போலேட் இருக்கிறது. சோலின் மற்றும் முட்டைகள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
மஞ்சள் கலந்த பால்
இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது, ஆண்டி ஆக்ஸ்டிடண்ட் உள்ளது. இவை ஒட்டுமொத்தமாக உடலுக்கு நல்லது. இது மன அழுத்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் நமது மனநிலையை சீராக வைத்திருக்கும். மனச் சோர்வை கட்டுப்படுத்த உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.