உங்கள் சிச்சனில் இந்த மசாலா பொருட்கள் இருந்தால் போதும். தினமும் உங்கள் இன்சுலின் அளவை சீராக்கும். மேலும் இது அதிக சுகர் நோய் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.
மஞ்சள்
இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள், ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்து இருக்கிறது. இது இன்சுலின் செயல்பாட்டை அதிகப்படுத்தும். சுகர் அளவை குறைக்கும். நம் உடலை சுத்திகரிக்க இதை தண்ணீர், டீ அல்லது சூப்பில் சேர்ந்து சாப்பிடலாம்.
வெந்தயம்
வெந்தயம் மற்றும் அதன் இலைகளில் நார்சத்து அதிகம். இவை ரத்த சர்க்கரையை சீராக்க உதவும். இந்நிலையில் இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது டீ போல இந்த விதைகளை வைத்து தயாரித்து குடிக்கலாம்.
பட்டை
இதில் இன்சுலினை சீராக வைத்துகொள்ள உதவுகிறது. ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை இது சீராக்கும். இதனால் இதை நாம் எடுத்துகொள்ள வேண்டும். குறிப்பாக நாம் சாப்பிடும் உணவு, யோகர்ட், டீ, காப்பியில் சேர்த்து குடிக்கலாம்.
நெல்லிக்காய்
இதில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இது இன்சுலின் செயல்பாட்டை அதிகப்படுத்தும். இதை நான் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
கிலோய் அல்லது அமிர்தவல்லி
இந்நிலையில் இதை நாம் தொடர்ந்து சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு சீராக வைத்து கொள்ள உதவும். இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் கணையத்தின் செல்களை பாதுகாக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“