/tamil-ie/media/media_files/uploads/2023/04/veyil.jpg)
வெயில் காலத்தில் ஏற்படும் வெப்ப அயர்ச்சி, அதாவது ஹீட் ஸ்டோக் இது எப்படி ஏற்படுகிறது என்றும் ஏற்பட்டால் மருத்துவரை எப்போது அணுக வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதிகமான வெப்ப நிலையில் நாம் வெளியே செல்லும்போது, இந்த வெப்ப அயர்ச்சி ஏற்படுகிறது. இந்நிலையில் இது ஏற்படும் போது, வலி ஏற்படும் நிலை மேசமாக சென்றால் ஹீட் ஸ்டோக் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
நமது உடல் அதிக வெப்பத்தை சந்திக்கும் போது, அதனால் உடலை குளிமையாக்க முடியாத நிலை ஏற்படும். மூளையின் ஹைப்போதலமஸ் பகுதி, உடலில் உள்ள வெப்ப நிலையை சீராக பார்த்துக்கொள்கிறது. குறிப்பாக உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி செல்ஷியசாக இருக்கும். உங்கள் உடலால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமான வெப்ப நிலையை நீங்கள் சந்தித்தால், உடலில் உள்ள வெப்பநிலையும் அதிகரிக்கும்.
முதல் நிலை :
இதன் முதல் நிலையில் தசைபிடிப்பு ஏற்படும். நமது உடலில் உள்ள உப்பு மற்றும் தண்ணீர் இழப்பால் ஏற்படும். குறிப்பாக, கால், கையில் ஏற்படும். இது குறைந்த நேரத்தில் சரியனாலும். இதனால் ஏற்படும் வலி மற்றும் அசெளகரியமான உணர்வு 48 மணி நேரம் வரை நீடிக்கலாம்.
இரண்டாம் நிலை
இந்நிலையில் இது மேசமான தாக்குதல், மயக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் உடல் வெப்ப நிலை 101 முதல் 104வரை அதிகரிக்கும்போது இந்த நிலை ஏற்படும். கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, அதிகமாக தண்ணீர் தாகாம் எடுக்கும். தசைகளில் வலி ஏற்படும். ரத்த அழுத்தம் குறைவதால் திடீரென்று மயக்கத்தை கூட ஏற்படுத்தும்.
கடைசி நிலை
இது மிகவும் மோசமான நிலை இப்படி ஏற்பட்டால், மருத்துவ உதவியை நீங்கள் பெற வேண்டும். இந்நிலையில் மரணம் கூட ஏற்படலாம். உடலின் வெப்ப நிலை 104 டிகிரி செல்ஷியஸ்-க்கு மேல் அதிகமானால், இந்த ஹீட் ஸ்டோக் ஏற்படும். மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால் குழப்பம் ஏற்படும். தோல் சிவப்பாக மாறும், வியர்க்காது, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படும்.
என்ன செய்ய வேண்டும்?
முடிந்த வரை குளிரான இடத்திற்கு செல்ல வேண்டும். குளிர்ந்த நீரை குடிக்க வேண்டும். கனமான உடையை அணிந்தால், அதை மாற்ற வேண்டும். உடலை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். குளிர்ந்த காற்று உடல் மேலே படும்படி செய்ய வேண்டும். உப்பு கலந்த நீரை பருக வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவு அதிகமாகும். நிலை மோசமானால் கண்டிப்பாக மருத்துவரை அணுக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.