ரூ.84 ஆயிரம் கோடி சொத்து; இந்தியாவின் 3ஆவது பணக்காரர்: யார் இந்த ரோஷ்ணி நாடார்?

ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்ணி நாடாரின் கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, திருமணம், வாழ்க்கை முறை குறித்து பார்க்கலாம்.

ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்ணி நாடாரின் கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, திருமணம், வாழ்க்கை முறை குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
HCL Technologies Chairperson Roshni Nadar Malhotra Education net worth business and more

ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் மகள் ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா

நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனமான ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்ணி நாடார். இவர் தற்போது 12 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்நிறுவனத்தை கவனித்து வருகிறார்.

Advertisment

அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்த ரோஷ்ணி நாடார், கெலாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில் எம்.பி.ஏ. முடித்திருந்தார்.
தொடர்ந்து, இவரிடம் 2020ஆம் ஆண்டு தந்தை ஷிவ் நாடார் ஹெச்.சி.எல்., நிறுவன பொறுப்புகளை ஒப்படைத்தார். அன்றுமுதல் ரோஷ்ணி, ஹெச்.சி.எல். நிறுவனத்தின் பணிகளை கவனித்து வருகிறார்.

நாட்டின் 3ஆவது பணக்காரர் ஆன இவரின் சொத்து மதிப்பு ரூ.84,330 கோடி ஆகும். இவருக்கு முந்தைய இடத்தில் முகேஷ் அம்பானியும், கௌதம் அதானியும் உள்ளனர்.
ரோஷ்ணி நாடாரின் கணவர் பெயர் ஷிகர் மல்ஹோத்ராவும் வெற்றிகரமாக தொழிலதிபராக திகழ்கிறார். மேலும், ரோஷ்ணி கலை, இலக்கியங்களிலும் ஆர்வம் கொண்டவர் ஆவார்.

இதனை வளர்க்கும் விதமாக அறக்கட்டளை ஒன்றையும் நடத்திவருகிறார். ரோஷ்ணியின் தாயார் கிரண் ஷிவ் நாடாரும் கலைகளில் ஆர்வம் கொண்டவர் ஆவார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: