/indian-express-tamil/media/media_files/2025/06/18/Head injury dr karthikeyan-267bce35.jpg)
Dr Karthikeyan
தலையில் அடிபடுவது பலருக்குப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும். நமது தலையில் உள்ள ஸ்கால்ப் எனப்படும் தோல் பகுதி அதிக ரத்த ஓட்டம் கொண்டது. அதனால் லேசான அடிப்பட்டால்கூட அதிக ரத்தம் வருவதுபோலத் தோன்றும். ஆனால், பயப்படத் தேவையில்லை.
சில சமயங்களில் அடிப்பட்ட பிறகு மூக்கிலிருந்து அல்லது காதிலிருந்து ரத்தமோ அல்லது திரவங்களோ வெளியேறினால், இது அபாயகரமான அறிகுறியாக இருக்கலாம்.
தலை அல்லது மூக்கில் அடிபட்டால், உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டுமா? மருத்துவமனைக்கு எப்போது செல்ல வேண்டும்? எது ஆபத்தான அறிகுறி? எப்படி கண்காணிப்பது? எவ்வளவு நேரம் கண்காணிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் நம் மனதில் அடுக்கடுக்காக எழலாம். இந்த குழப்பங்களைத் தீர்த்து, சரியான முதலுதவி பற்றிய தெளிவான தகவல்களை இந்த வீடியோவில் வழங்குகிறார் டாக்டர் கார்த்திகேயன்.
மருத்துவமனை எப்போது?
பொதுவாக, தலையில் அடிபட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குறைந்தது 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள். ஆபத்தான அறிகுறிகள் எதுவும் தென்படாத வரை, பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. ஆனால், எந்த நேரத்திலும் அறிகுறிகள் மாறலாம் என்பதால், மருத்துவக் கண்காணிப்பு மிகவும் அவசியம். அரிதாக, சப்-டூரல் ஹெமரேஜ் போன்ற சில வகையான உள்ரத்தக் கசிவுகள் ஏற்படலாம், ஆனால் இது மிகவும் அரிதானது.
ஆகவே, தலையில் அடிபடுதல் அல்லது மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் போன்ற சமயங்களில், இந்த முதலுதவி வழிமுறைகளைப் பின்பற்றி, தைரியமாகச் செயல்பட்டால், பல உயிர்களைக் காக்க முடியும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.