தலை பேன் தொல்லை என்பது பலருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை. இதை நீக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், இதில் பேன் சீப்பின் பங்கு என்ன என்பது குறித்த தெளிவு அவசியமானது.
பேன் பொதுவாக நேரடித் தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. பேன் இருக்கும் ஒருவரின் தலையில் இருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவக்கூடியது. கையுறை அணியாமல் பேன் சீவும்போது, பேன் சீவுபவர்களுக்கே கூட பேன் பரவும் அபாயம் உள்ளது
Advertisment
இந்த வீடியோவில், டாக்டர் ராதா சுப்பிரமணியன், தலைப் பேன்களைக் குணப்படுத்துவதற்கான சரியான வழிமுறைகள் மற்றும் பேன் சீப்பின் பயன்பாடு குறித்து அத்தியாவசிய தகவல்களை வழங்குகிறார்.
பேன்களுக்கான உண்மையான சிகிச்சை பெர்மெத்ரின் (Permethrin) அல்லது ஐவர்மெக்டின் (Ivermectin) போன்ற மருந்துகள் மூலமே செய்யப்பட வேண்டும். உங்கள் வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற சரியான மருந்தளவு மற்றும் சிகிச்சை முறையை உங்கள் தோல் மருத்துவரிடம் (Dermatologist) கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்.
Advertisment
Advertisements
பேன் சீப்பை சிகிச்சை மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. பேன் சீப்பை மட்டுமே ஒரு முழுமையான சிகிச்சையாகக் கருதுவது தவறு. மருந்துகளால் பேன்களைக் கொன்ற பிறகு, இறந்த பேன்களையும், அவற்றின் முட்டைகளையும் அகற்ற பேன் சீப்பு பயனுள்ளதாக இருக்கும். எனவே, பேன் சீப்பை ஒரு துணை கருவியாகப் பயன்படுத்தி, முறையான மருத்துவ சிகிச்சையுடன் இணைக்கும்போது, தலை பேன் தொல்லையிலிருந்து முழுமையாக விடுபடலாம்.