கவலை அல்லது பதட்டம், ஒரு பொதுவான உணர்வு. இது ஒருவரைக் கவலையாகவோ, அழுத்தமாகவோ அல்லது அமைதியின்மையாகவோ உணர வைக்கிறது. பெரும்பாலும், ஒருவர் காரணம் இல்லாமல் கூட ஒரு கவலை உணர முடியும். பதட்டம் என்பது மன அழுத்த தூண்டுதல்களுக்கு நம் உடல் பதிலளிக்கும் விதம் அல்லது செரோடோனின் குறைந்த அளவை நம் மூளை சமாளிக்கும் விதம்.
எப்படியிருந்தாலும், அமைதியற்ற உணர்வு ஒரு இனிமையான அனுபவம் அல்ல. ப்ரீனா ஹெல்த்கேர் மற்றும் ஆயுர்வேத அகாடமியின் நிறுவனர் டிம்பிள் ஜங்தா சமீபத்தில் கவலைக்கான ஆயுர்வேத தீர்வுகளை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியது இங்கே:
எல்லோரும் எப்போதாவது பதட்டத்தை அனுபவிக்கிறார்கள். தேர்வுகள், புதிய வேலையைத் தொடங்குதல், வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை எடுப்பது அல்லது நேசிப்பவரை இழப்பது போன்ற மன அழுத்த சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, கவலை அதிகரிக்கும்.
பெரும்பாலான வெளிப்புற சூழ்நிலைகள் மற்றும் சூழ்நிலைக்கு ஒரு நபரின் பதில் ஆகியவை கவலைக்கான தூண்டுதலாக செயல்படுகின்றன. கவலையை அனுபவிப்பது அனைவருக்கும் பொதுவானது. இருப்பினும், சிலர் தொடர்ந்து கவலைப்படுகிறார்கள், இது அவர்களின் அன்றாட வாழ்க்கையை அனுபவிப்பதில் இருந்து அல்லது மற்றவர்களுடன் இயல்பான முறையில் தொடர்புகொள்வதை கூட தடுக்கிறது.
ஆயுர்வேதம் படி, கவலைக்கான சிகிச்சையின் முதல் படி கவலை நோயின் வகை மற்றும் அதன் அடிப்படை காரணத்தை தீர்மானிப்பதாகும். எந்த வகையான கவலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நோயாளி போதுமான தூக்கத்தைப் பெறுவதையும், கண்டிப்பான உணவைக் கடைப்பிடிப்பதையும், ஒரு வழக்கத்தைப் பின்பற்றுவதையும் அது எப்போதும் உறுதிப்படுத்துகிறது. இந்த நுட்பங்கள் பானிக் அட்டாக் (panic attacks) தீவிரத்தை கணிசமாகக் குறைக்கின்றன.
ஆயுர்வேத நிபுணரில் பரிந்துரைகள் இங்கே..
* மென்மையான எண்ணெய் மசாஜ், மூளை மற்றும் பிட்யூட்டரி சுரப்பிக்கு ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.
* அஸ்வகந்தா, பதட்டத்தைக் குறைக்க உதவும்.
* பிரம்மி (Brahmi) என்பது கவலையை குறைக்கும் மற்றொரு தாவரமாகும். இது உங்கள் உடலில் உள்ள கார்டிசோலின் (ஸ்ட்ரெஸ் ஹார்மோன்) அளவைக் குறைக்க உதவுகிறது. இது மூளை செல்களை புதுப்பிக்கிறது.
* ஒட்டகத் தோரணையில் (Camel pose) அமர்வதும் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். பதட்டத்தை சமாளிப்பது எப்போதுமே கடினமான பணியாகும், ஆனால் சுய பாதுகாப்பு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பது உங்கள் கவலையின் தீவிரத்தை குறைக்கும்.
* வல்லாரை, பிரம்மி, அஸ்வகந்தா, அதிமதுரம், சடா மஞ்சில் மற்றும் நெல்லிக்காய் போன்ற மூலிகைகள், பதட்டத்தைக் குறைத்து, உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யக் கூடியவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
* உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால், க்ஷீரபல தைலத்துடன் (Ksheerabala Thailam) கால் மசாஜ் செய்தால், நீங்கள் வேகமாக தூங்குவீர்கள்; மானசமித்ரவடகம் போன்ற மூலிகை மருந்துகள் மக்கள் மன அமைதியைப் பெற உதவியுள்ளன, என்கிறார் கேரள ஆயுர்வேத மருத்துவர் அர்ச்சனா சுகுமாரன்.
ஆயுர்வேதம் மனமும் உடலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் கருத்தை நம்புகிறது - உங்கள் மனதை எது பாதிக்கிறதோ, அது உங்கள் உடலையும் பாதிக்கிறது. எல்லாவற்றுக்கு மேலாக, உடலைக் கவனித்துக்கொள்வது போலவே மனதைக் கவனித்துக்கொள்வதும் முக்கியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“