வாழைப்பழம் சாப்பிட்டால் சுகர் கூடுமா? விளக்கும் டாக்டர் அருண்குமார்

இவ்வளவு நன்மைகள் நிறைந்த வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதில் உண்மை இருக்கிறதா?

இவ்வளவு நன்மைகள் நிறைந்த வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதில் உண்மை இருக்கிறதா?

author-image
WebDesk
New Update
Diabetes

Diabetes Health

வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி, பிராக்டன் வகை நார்ச்சத்துகள் உள்ளன.

Advertisment

ஒரு நாளுக்கு ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொண்டால் நமது உடலுக்கு தேவைப்படும் பொட்டாசியம் சத்து பூர்த்தியாகும். கூடுதலாக குடல் சார்ந்த பிரச்னைகளையும் சரி செய்ய உதவும். வாழைப்பழத்தை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால், உடலில் போதுமான பொட்டாசியம் சேர்ந்து, இதயம் சீராக செயல்பட உதவும். நமது உடலிற்கு மிகவும் தேவைப்படும் வைட்டமின் சி, வைட்டமின் பி 6, இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் வாழைப்பழத்தில் உள்ளது.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதில் உண்மை இருக்கிறதா?

இந்த கேள்விக்கு தன்னுடைய யூடியூப் வீடியோவில் பதிலளித்த டாக்டர் அருண்குமார்

Advertisment
Advertisements

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை அளவோடு சாப்பிடலாம். இது அவர்களின் சர்க்கரை நோய் மேலாண்மைக்கு உதவும் ஒரு நல்ல உணவு. ஆனால், வாழைப்பழம் சாப்பிடும்போது, தங்கள் சர்க்கரை அளவை கவனிக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

அதேநேரம் நீங்கள் சர்க்கரை நோய்க்காக லொ கார்ப் அல்லது பேலியோ டயட் கடைபிடித்தால், நீங்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: