முகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்!

தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளி முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று அழுக்கை நீக்குகிறது. 

By: Published: July 20, 2019, 6:28:09 PM

அழகு என்று வந்து விட்டால் மட்டும் ஆண், பெண் என்ற பேதமே இல்லை. மாசு மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாக சருமம் மிக சீக்கிரமே பொலிவிழந்து விடுகிறது, அதன் மென்மை தன்மையையும், ஈரப்பதத்தையும், அழகையும் இழந்து போவதை யாரும் விரும்ப மாட்டார்கள். பார்லருக்கு செல்ல விருப்பமில்லாதவர்களுக்காகவே இந்த பப்பாளி டிப்ஸ்.

பப்பாளி,தேன் ஃபேஸ் பேக்

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான பேக் இது. தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளி முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று அழுக்கை நீக்குகிறது.

பப்பாளியின் விழுது – ¼ கப்
தேன் – ½ தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி
இவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் நான்கு நாட்கள் இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

பப்பாளி மற்றும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்

பப்பாளி மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். மேலும் இது முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.

பப்பாளி விழுது – தேவையான அளவு
ஆரஞ்சு சாறு – 3 தேக்கரண்டி
ஒரு பௌலில் பப்பாளி விழுது தேவையான அளவு எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனால் முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும்.

பப்பாளி, வாழைப்பழம் மற்றும் வெள்ளரி

சருமத்தை பிரகாசமாக்க வாழைப்பழம், வெள்ளரி மற்றும் பப்பாளி ஆகிய மூன்றையும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். பப்பாளி, வெள்ளரி மற்றும் வாழைப்பழம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 10-12 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும். இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Health beauty skin papaya face pack

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X