Health Benefits and cons of Turkey Berry Tamil News : சுண்டக்காய், பழங்கால நாட்டுப்புற மருத்துவ நடைமுறைகளில் பயன்படுத்தப்பட்ட, இன்றும் சில இடங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான உணவு மற்றும் மூலிகை மருந்து. உலகம் முழுவதும் இது மிகவும் பொதுவானது என்றாலும், அதன் சிறந்த பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பற்றி பலர் அறிந்திடாத விஷயங்கள் ஏராளம். சுண்டக்காய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே பார்க்கலாம்.
சுண்டக்காய் என்றால் என்ன?
சுண்டக்காய் என்பது ஒரு வகை முள் உள்ள, பூ பூக்கும் செடி. இது மஞ்சள்-பச்சை, பட்டாணி அளவிலான காய்களை உருவாக்குகிறது. இது பல்வேறு சமையல், தோட்டக்கலை மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்.
இதனை, முட்கள் நிறைந்த நைட்ஷேட், devil’s fig, ஷூ ஷூ புஷ், காட்டு கத்திரிக்காய், பட்டாணி கத்திரிக்காய் உள்ளிட்ட பல பெயர்களில் அழைப்பதுண்டு. இந்த சக்திவாய்ந்த சுண்டக்காய் பல்வேறு காலநிலைகளில் செழித்து வளரும் தாவரம். எனினும், இது சூரிய ஒளி நிறைந்த பகுதிகளில் சிறப்பாக வளரும். இவை அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் தீவுகள் உட்பட உலகம் முழுவதும் காணப்படுகின்றன.
சுண்டக்காய் மிகவும் பரவலாக இருப்பதால், அது முதலில் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பல வல்லுநர்கள் இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டதாக நம்புகிறார்கள்.
சுண்டக்காயின் ஆரோக்கிய நன்மைகள்
உயர் ரத்த அழுத்தம், செரிமான பிரச்சனைகள், பாக்டீரியா தொற்றுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய எண்ணற்ற உடல் உபாதைகளுக்கு சுண்டக்காய் ஓர் மூலிகை தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும், சுண்டக்காயின் மருத்துவ குணங்களை மையமாகக் கொண்ட அறிவியல் ஆராய்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது.
இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை என்பது ஒரு பொதுவான நிலை, இது போதுமான இரும்பு உட்கொள்ளலின் விளைவாக உருவாகலாம். இது சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் தொடர்புடையது. சுண்டக்காய் குறிப்பாக தாவர அடிப்படையிலான இரும்புச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளது மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க அடிக்கடி உட்கொள்ளலாம்
சுண்டைக்காயில் அதிக இரும்புச் செறிவு இருந்தாலும், அது செரிமான மண்டலத்தில் நன்கு உறிஞ்சப்படாமல் இருக்கலாம் என்று சமீபத்திய விலங்கு ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. எனவே, உங்கள் உணவில் சுண்டைக்காயை சேர்ப்பது உங்கள் இரும்பு நிலையை வியத்தகு முறையில் மேம்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ட்ராபெர்ரி, பெல் பெப்பர் அல்லது சிட்ரஸ் பழம் போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை இணைத்தல், தாவர அடிப்படையிலான உணவுகளிலிருந்து இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்
யுனைடெட் ஸ்டேட்ஸில், கிட்டத்தட்ட 50% பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. இது இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கான முக்கிய ஆபத்து காரணி. சுண்டைக்காயில் உள்ள கலவைகள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான இயற்கையான வழியாகச் செயல்படும் என்று ஆரம்பகால ஆராய்ச்சி கூறுகிறது.
சுண்டைக்காயில் கேலிக் அமிலம் மற்றும் ஃபெரூலிக் அமிலம் போன்ற பல்வேறு தனித்துவமான சேர்மங்கள் உள்ளன. அவை சோதனைக் குழாய் ஆய்வுகளில் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தியுள்ளன.
மேலும், சுண்டக்காயின் சாறு உயர் ரத்த அழுத்தம் உள்ள எலிகளில் ரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைப்பதாக ஒரு விலங்கு ஆய்வு கண்டறிந்துள்ளது. இருப்பினும், இது மனிதர்களில் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுமா என்பதைத் தீர்மானிக்க தற்போது எந்த ஆய்வும் இல்லை.
ஆரோக்கியமான நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கலாம்
சுண்டைக்காய் பல வழிகளில் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கும் சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது என்று சோதனை-குழாய் ஆய்வுகள் காட்டுகின்றன. ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸுக்கு எதிராக சுண்டக்காய் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்தது.
சுண்டக்காயின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காயங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கும், வெட்டுக்கள் மற்றும் புண்களை குணப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப தரவு நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், மனிதர்களில் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு இந்த காய் நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்க மிகவும் நன்கு வடிவமைக்கப்பட்ட மனித ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்
சுண்டக்காய் செடியின் அனைத்து பகுதிகளும் அதாவது அதன் வேர்கள், தண்டுகள், இலைகள் மற்றும் பழங்கள் உட்பட அனைத்தும் உலகம் முழுவதும் மருத்துவ மற்றும் சமையல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
அதன் பழம் பெரும்பாலும் எண்ணெய் அல்லது நெய்யில் வறுக்கப்பட்டு, முழுவதுமாக உட்கொள்ளப்படுகிறது. அதேசமயம் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களை உலர்த்தி, தூள், தேநீர் அல்லது டிஞ்சராக பயன்படுத்தலாம்.
சுண்டக்காய் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு மற்றும் பொதுவாகப் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், அதன் துல்லியமான அளவை மதிப்பிடுவதற்கும், உட்கொண்டால் பக்கவிளைவுகளின் சாத்தியமான அபாயத்தை மதிப்பிடுவதற்கும் வலுவான தரவு பற்றாக்குறை உள்ளது.
உருளைக்கிழங்கு, மிளகுத்தூள், தக்காளி மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை உள்ளடக்கிய நைட்ஷேட் காய்கறிகள் போன்ற தாவரங்களின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது இந்த சுண்டக்காய்.
மற்ற நைட்ஷேட்களைப் போலவே, சுண்டக்காயிலும் கிளைகோஅல்கலாய்டுகள் எனப்படும் ஒரு வகை சேர்மங்கள் உள்ளன. அதிக அளவுகளில் உட்கொள்ளும்போது, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் போன்ற பாதகமான செரிமான மற்றும் நரம்பியல் அறிகுறிகளை கிளைகோல்கலாய்டுகள் ஏற்படுத்தும்.
கர்ப்பமாக இருக்கும் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே சுண்டக்காய் பாதுகாப்பு குறித்து வலுவான அறிவியல் சான்றுகள் இல்லை. இருப்பினும், கானா போன்ற சில நாடுகளில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இரும்பு நிலையை மேம்படுத்தவும், பாலூட்டலை மேம்படுத்தவும் பச்சையாக சுண்டைக்காயை சாப்பிடுவது பொதுவான நடைமுறையாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.