/indian-express-tamil/media/media_files/2025/04/16/H1G3xImflC1oBxV3CoTn.jpg)
மருத்துவப் பயன்கள் நிறைந்த விளக்கெண்ணெய் (castor oil) ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை தாவர எண்ணெய் ஆகும். மற்ற எண்ணெய்களை விட அதிக அடர்த்தி கொண்டதால், சற்று பிசுபிசுப்புடன் இருக்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை சுத்தம் செய்வதற்கும், உடல் சூட்டைத் தணிப்பதற்கும் விளக்கெண்ணெயைத்தான் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
விளக்கெண்ணெயில் ஆன்டி மைக்ரோபியல், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், மலமிளக்கி தன்மை இருப்பதால் எல்லா துறைகளில் பயன்படுகிறது. அதனால், தான் இதை அழகு சாதனப் பொருட்கள், ஷாம்பு, கண்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், ரிங்கினெக்கிக் அமிலம், மோனோசேச்சுரேட் கொழுப்பு அமிலம் ஆகியவற்றை கொண்டுள்ளது. விளக்கெண்ணெய்க்கு மணம், சுவை என்று எதுவும் கிடையாது. இது பூஞ்சை மணம் உடையது. இந்த விளக்கெண்ணெய்யில் உள்ள காம்டோஜெனிக் அமிலம் நம் சருமத்திற்கு நல்லது என்றும் இதை முகத்திற்கு அப்ளை செய்தால் சரும துளைகளை போய் அடைக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மலச்சிக்கலை போக்கும் விளக்கெண்ணெய்:
மலச்சிக்கல் நோய் பாதிப்பின் தீவிரத்தை குறைப்பதில் விளக்கெண்ணெய் மிக பயனுள்ளதாக இருக்கும். இது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இதற்கு அதன் பிசுபிசுப்பு தன்மையே காரணம். இதை 15 ml லிட்டர் அளவில்10 நாட்களுக்கு ஒருமுறை காலையில் வெறும் வயிற்றில் பால் (அ) வெதுவெதுப்பான குடிநீரில் குடித்து வந்தால் இறுகிய மலத்தை இலகுவாக்கி வெளியே தள்ளும். இதனால், 30 ml லிட்டர் அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில் இது குடல் தசைகளை வேகமாக்கி வயிற்றுப்போக்கு ஏற்படுத்திவிடும். இந்த எண்ணெய்யை அளவுக்கு அதிகமாக அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது, மாதம் 3 முறை உபயோகிப்பதே சிறந்தது என்கிறார் மருத்துவர் மைதிலி.
சருமம் சுருங்குவதை தடுக்கிறது:
நம் சருமம் சுருங்க காரணம் சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைவது தான். சருமம் சுருங்குவதால் இளவயதிலேயே வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் விளக்கெண்ணெய்யை பயன்படுத்தும் போது அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. எனவே தினமும் காலையில் கண்கள், வாய், கன்னம், கழுத்து போன்ற பகுதிகளில் விளக்கெண்ணெய்யை தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவி விடுங்கள். சருமம் இளமையாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.