சமையலில் முக்கியமாக பங்கு வகிக்கும் பொருட்களில் ஒன்று சீரகம். ஏராளமான மருத்துவ குணம் கொண்டது. சீரகத்தின் பயன்கள் குறித்து பார்க்கலாம்.
சீரகத்துடன் சிறிது மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சீரகம் நல்லது. ஒரு ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இது தூக்க பிரச்சனைகளையும் போக்கலாம். அடுத்ததாக சீரகத்தை வறுத்து சூடான நீரில் கலக்கவும். பின்னர் அதை மீண்டும் கொதிக்க வைத்து படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்கலாம். இது உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை தரும்.
சீரகத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. மேலும் இதை தினமும் உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்தும். இரவில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலக்கவும். வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடிக்க செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதோடு உடலில் உள்ள நச்சுகளும் நீங்கும்.
குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சீரகம் உதவுகிறது.
திராட்சைப் பழச்சாறுடன், சிறுது சீரகத்தைப் பொடித்து போட்டு பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
இரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. கொழுப்பு கரைவதால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். இதனால் உடல் எடை குறையும்.
சீரகத்தை ஒரு நாளைக்கு 300 முதல் 600 மில்லிகிராம்தான் சாப்பிட வேண்டும்.
அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்குமாம். அதோடு முந்தைய காலத்தில் கருவை கலைக்க சீரகத்தையும் அதிகமாக சாப்பிடுவார்களாம். எனவே கரு நிற்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் சீரகத்தை அளவாக சாப்பிட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"