டிராகன் பழங்களை பற்றி நாம் பெரிதாக தெரிந்திருக்க மாட்டோம். இந்நிலையில் 2017ம் ஆண்டு வெளியான ஆய்வில், டிராகன் பழங்களை சாப்பிட்டால், ரத்த குளுக்கோஸ் அளவு குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 கிராம் டிராகன் பழத்தில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்வோம்.
100 கிராம் டிராகன் பழங்களில் உள்ள சத்து தொடர்பாக தெரிந்துகொள்ளலாம்.
கலோரிகள் : 60
கார்போஹைட்ரேட்: 9 கிராம்
நார்சத்து: 1.5 கிராம்
சுகர் : 8 கிராம்
புரத சத்து: 1 கிராம்
கொழுப்பு சத்து: 0.4 கிராம்
வைட்டமின் சி: 9 மில்லிகிராம்
கால்சியம்: 9 மில்லிகிராம்
இரும்பு சத்து: 0. 9 கிராம்
இதில் உள்ள அதிக நார்சத்து ஜீரணத்தை கவனித்துகொள்ளும். மேலும் வயிற்றின் செயல்பாடை சிராக்கி, மலச்சிக்கலை தடுக்கும். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
இதில் உள்ள நார்சத்து மற்றும் கொழுப்பு சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். இந்நிலையில் இதய ஆரோக்கியத்தை காப்பாற்றும் தன்மை இதில் உண்டு.
இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நமது நோய் எதிர்ப்பு சக்தி நோய்களில் இருந்து காப்பாற்ற மற்றும் தொற்றுகளை தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள அதிக தண்ணீர் சத்து, நமது உடலுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. நமது உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் ஆன பொட்டாஷியத்தை வழங்கிறது. உடலில் உள்ள திரவங்களை சீராக்குகிறது. தசைகளின் வேலையை செய்ய உதவுகிறது.
இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்காது. மேலும் இதை சாப்பிட்டால் அதிக நேரம் பசிக்காது.
இதில் உள்ள வைட்டமின்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆரோக்கியமான சருமத்தை வழங்குகிறது. இதில் உள்ள வைட்டமின் சி கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் சருமம் சுருங்கி, விரியும் தன்மையை இழக்காமல் இருக்கும். மேலும் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“