/indian-express-tamil/media/media_files/2025/04/28/WGkwnhcmJRU1b8ULb3yt.jpg)
"நுரையீரல் கழிவுகளை வெளியேற்றும், ஆஸ்துமா பாதிப்பை குறைக்கும் இந்த நிற திராட்சை"
நம் அனைவருக்குமே பழங்கள் சாப்பிடுவது மிக பிடிக்கும். அப்படி ஒவ்வொருவருக்கும் தனியாக உள்ள பழங்கள் லிஸ்ட்டில் கண்டிப்பாக இந்த திராட்சை பழமும் இடம் பெற்றிருக்கும். திராட்சையில் வைட்டமின் ஏ,சி, நார்சத்து, நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடலில் ஏற்படும் கிருமிகளிலிருந்து எதிர்த்து போராட உதவுகிறது. ஆதலால் திராட்சையை தினமும் சாப்பிடுவது நல்லது.
திராட்சையில் 3 வகைகள் உள்ளன. அதில் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் என நிறங்களின் அடிப்படையில் 3 வகையான திராட்சைகள் உள்ளன. அதில் பச்சை நிற திராட்சை அதிகமாக புளிப்பு இல்லாமல் தித்திக்கும் என்பதால் பலரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த திராட்சைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வாரி வழங்குகின்றன. அப்படி என்ன நன்மைகளை இவை நமக்கு அளிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
பச்சை திராட்சை பிரியர்கள் எண்ணிக்கை மிக ஏராளம். இது விரும்பாதவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. பச்சை திராட்சை மிகவும் சுவையானது மட்டுமல்ல அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மூளை உறுப்பை சுறுசுறுப்பாக ஆரோக்கியத்துடன் செயல்பட வைக்கிறது பச்சை நிற திராட்சை. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. வாரத்திற்கு ஒரு கப் அளவில் பச்சை நிற திராட்சை சாப்பிட்டு வருவதால் நுரையீரலில் தேங்கி இருக்கக் கூடிய கழிவுகள் வெளியேறி ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. பொதுவாக பச்சை திராட்சை ஆஸ்துமா பிரச்னையில் இருந்து விடுதலை தரும். ஏனென்றால் திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும். அதனால் நீங்கள் தினமும் சிறிதளவு பச்சை திராட்சை சாப்பிடுவது உங்களின் சுவாச மண்டல பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுதலை பெற செய்யும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
சிலருக்கு தினமும் காலை கடன்களை கழிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது. திராட்சையில் நார்ச்சத்துகள் அதிகம் கொண்டது. மேலும் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை போக்கும் நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்தது. எனவே மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் தினமும் சிறிது பச்சை திராட்சை பழங்களை சாப்பிடுவது சிறந்த பலனை தரும். உடல் எடையை பராமரிக்கிறது. திராட்சைப் பழங்களை தினமும் சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கல் உருவாகுவது தடுக்கப்படும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us