நமக்கு அடிக்கடி ஏற்படும் தொல்லைகளான சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கு எளிமையான இரண்டு பொருட்கள் தீர்வளிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த இரண்டு பொருட்கள் லவங்கம் மற்றும் தேன். இதில் லவங்கத்தை பொடி செய்து தேனுடன் சாப்பிட உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இதில் வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது என்று இப்போது பார்ப்போம்.
லவங்கம்
லவங்கத்திற்கு நம் உடலில் ஆக்ஸிஜனை உட்கிரகிக்கும் தன்மை அதிகம் என்பதால், நம் உடலில் ஆக்ஸிஜன் அதிகரிப்பை உறுதி செய்கிறது. தினசரி உணவுகளில் சிறிதளவு லவங்கம் சேர்த்துக் கொள்வது உங்கள் உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் செயலை உறுதிப்படுத்தும்.
தேன்
தேனில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. தினமும் தேன் சாப்பிட்டு வர உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். தேன் விரைவில் செரிமானத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே இதய பாதிப்புகளை தடுக்க தேன் உதவுகிறது.
இப்போது லவங்கத்தைப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்பதைப் பார்ப்போம்.
காலையில் உணவில் 2 டீஸ்பூன் தேனுடன், சிறிது லவங்கப்பொடியை தூவிச் சாப்பிட அஜீரணம் குணமாகும்.
இளஞ்சூடான நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அதனுடன் சிறிதளவு லவங்கப்பொடியைச் சேர்த்துச் சாப்பிட சைனஸ், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஓடிப் போகும்.
தினமும் 3 வேளை, 1 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பின் வீரியம் குறையும்
தினமும் மூன்று வேளையும் 2 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் லவங்கப்பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்துவர உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துபோகும்.
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு மிதமான சுடுநீரில் தேனையும், லவங்கப் பொடியையும் சேர்த்துக் குடித்து வந்தால் உடலின் எடை குறையும்.
சொறி, படை போன்ற பிரச்சனைகளுக்கு தேன், லவங்கப்பொடி இரண்டையும் சமஅளவில் எடுத்து ஒன்றாகக் கலந்து, பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி வர சொறி படை குணமாகும்.
எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்க இளஞ்சூடான நீரில் 4 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் லவங்கப்பட்டைப் பொடியைக் கலந்து பருக வேண்டும்.
தேனையும், லவங்கப்பொடியையும் சம அளவில் கலந்து இருவேளைகளிலும் சாப்பிட்டு வர காது மந்தம் குணமாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil