Advertisment

வேப்பங்குச்சியில் பல் துலக்குவதால் இவ்வளவு நன்மைகளா?

வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் போது, அது வேப்ப எண்ணெயை வெளியிடுகிறது, இது வலுவான நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neem

Health benefits of using neem twigs to brush your teeth

பல் சுகாதாரம் என்பது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். அதனால்தான், ஏதேனும் பல் பிரச்சனைகள் ஏற்பட்டால், மூல காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியம்.

Advertisment

ஆனால் சில நேரங்களில், எளிமையான விஷயங்களைச் செய்வது நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தும் - அவற்றில் ஒன்று, வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேப்பங்குச்சியால் பல் துலக்குவது.

ப்ரெஷ்னர்களை நம் வாயில் தெளிப்பது முதல் சுயிங்-கம் வரை, வாய் புத்துணர்ச்சிக்காக நாம் அனைத்தையும் செய்கிறோம். ஆனால் இந்த விரைவான தீர்வுகள்’ மூல காரணத்தை தீர்க்காது.

பல நன்மைகளைக் கொண்ட வேப்பங்குச்சி அல்லது வேம்பு பேஸ்ட் பயன்படுத்துங்கள்” என்று ஊட்டச்சத்து நிபுணர் நிதி குப்தா இன்ஸ்டாகிராமில் கூறினார்.

வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் போது, அது வேப்ப எண்ணெயை வெளியிடுகிறது, இது வலுவான நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது,

அது எப்படி உதவுகிறது?

* பிளேக் உருவாவதைத் தடுக்கிறது

*ஈறுகளை வலுவாக்கும்

* துர்நாற்றத்தை நீக்குகிறது

* பற்களை வெண்மையாக்கும்

சமீபத்தில், நான் இதை என் வாய்வழி சுகாதாரத்திற்காக பயன்படுத்த ஆரம்பித்தேன். நான் தினமும் இதைப் பயன்படுத்துவதில்லை, ஆனால் அதன் பலனைப் பெற வாரத்திற்கு இரண்டு முறையாவது, வேப்பங்குச்சியால் பல் துலக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன், ”என்று அவர் குறிப்பிட்டார்.

அதை எப்படி பயன்படுத்துவது?

*வேப்ப மரத்திலிருந்து சிறிய குச்சியை உடைக்கவும்.

*பயன்படுத்துவதற்கு முன்பு அதை நன்கு கழுவவும். இப்போது அதை மெல்லத் தொடங்குங்கள்.

“வேப்பங்குச்சியில் பல் துலக்கும் முன், அதில் உப்பு மற்றும் கடுகு எண்ணெயைக் கலந்து தடவலாம். இப்படி செய்வதால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவாகும், ”என்று குப்தா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment