Advertisment

இரவில் பெண்கள் 'ப்ரா' அணிவது அவசியமா? ஆபத்தா?

இளம் பெண்கள் மத்தியில் இந்நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் ப்ரா மற்றும் மார்பக புற்றுநோய் பற்றி பல வதந்திகள் பரவியுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Get The Right Bra To Reduce Your Breast Size

சீரான மார்பகங்கள் உங்கள் அழகை மேலும் அதிகரிக்கின்றன.

பொதுவாக ஆண்கள் பெண்கள் இருவருமே உள்ளாடை அணிவது வழக்கமான ஒன்று. அதிலும் குறிப்பாக பெண்கள் உள்ளாடை அணிவது அவசியம் என்பது பலராலும் கூறப்பட்டு வருகிறது. அதே சமயம் பெண்கள் இரவில் தூங்கும்போது உள்ளாடை அணியக்கூடாது அப்படி அணிந்தால் மார்பக புற்றுநோய் வரும் என்று சில தகவல்கள் உலா வருகின்றன.

Advertisment

உள்ளாடைகளைப் பொறுத்தவரை, அழகை பராமரிக்க அணிவது என்பது உண்மைதான். ஆனால் சரியான உள்ளாடைகள் நாள் முழுவதும் அணிந்திருக்கும்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை பொறுத்து அதன் தாக்கம் இருக்கும். ஏராளமான தரமற்ற உள்ளாடைகள் உள்ளன. அவற்றின் அழகான தோற்றம் பெண்களுக்கு நெருக்கமான ஒன்றாக இருந்து இதை வாங்கினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

உற்பத்தியாளர்கள் கீழ் சிறந்த வகைப்படுத்தப்பட்ட ஆடைகள் உள்ளது. இது நவீன கால பெண்கள் மற்றும் சிறந்ததை விரும்பும் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதே சமயம் அணிவதற்கு கச்சிதமாகவும் மதிப்பு மிக்கதாகவும் இருக்கும்.

இது குறித்து மார்க்கெட் வாட்ச் அறிக்கையின்படி,

இந்திய உள்ளாடைகளின் சந்தை 2022 மற்றும் 2027 க்கு இடையில் 13.13 சதவிகிதம் சிஏஜிஆர் (CAGR) இல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஃப்ரீஸ்டாண்டிங் மற்றும் பல-பிராண்ட் சில்லறை விற்பனை நிலையங்களில் உள்ளாடைகள் பரவலாகக் கிடைக்கின்றன. அதே சமயம் குறைந்த மற்றும் தரமற்ற உள்ளாடைகள் என பல்வேறு வரம்புகள் உள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறான பிரா மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்?

உள்ளாடை எப்போதும் ஒரு பிரபலமான டாப்பிக்காக உள்ளது. இருப்பினும், உடல்நலம் என்று வரும்போது, ​​ப்ரா அணிவதற்கும் புற்றுநோய்க்கான அதிக ஆபத்துக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை மற்றும் சந்தேகங்கள் உள்ளன. மார்பக புற்றுநோய் என்பது மார்பக திசுக்களில் உருவாகும் ஒரு வகை நோய் தொற்றாகும்.

மார்பகத்தின் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மார்பகத்தில் உள்ள கட்டிகள், முலைக்காம்பிலிருந்து திரவம் கசிவு மற்றும் தோலின் மங்கலான அல்லது செதில் பகுதி ஆகியவற்றின் மூலம் இதை அடையாளம் காணலாம். இந்தியாவில், தற்போது மார்பக புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது.  குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் இந்நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் ப்ரா மற்றும் மார்பக புற்றுநோய் பற்றி பல வதந்திகள் பரவியுள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் இணையம் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட பல தளங்களில் மார்பக புற்றுநோய் குறத்து தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன. இதில் சில வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவை அனைத்துமே மிகவும் அண்டர்வைர், பொருத்தமற்ற ப்ராக்கள் உள்ளிட்ட பொதுவானவை பல விஷங்களை உள்ளடக்கியது.

அண்டர்வைர் ​​பிரா

மார்பக புற்றுநோய் குறித்து பல தவறான கருத்துகள் பரவி வருகிறது. இதில் ஒரு பொதுவான தவறான புரிதல் என்னவென்றால், அண்டர்வைர் ​​ப்ரா அணிவது நிணநீர் திரவம் உடலில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கிறது மற்றும் நிணநீர் மண்டலத்தை அழுத்துகிறது, இதனால் மார்பகத்தில் நச்சுகள் உருவாகின்றன. இதுவே மார்பக புற்றுநோயின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கூற்றுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது.

பொருத்தமற்ற பிரா

மிகவும் இறுக்கமான பிராவை அணிவது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், ப்ரா அணிவது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ப்ரா வகை அல்லது ப்ராவின் துணி மார்பக புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தாது. மார்பகப் புற்றுநோய்க்கும் ப்ரா அணிவதற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த ஒரு ஆய்வின்படி, ப்ரா அணியாத பெண்களுக்கும், ப்ரா அணிந்த பெண்களுக்கும் புற்றுநோய் அபாயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.

ப்ரா அணிந்து படுக்க செல்வது புற்றுநோய் ஏற்படுத்துமா?

உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம். ஒரு இரவு நல்ல தூக்கம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. உங்கள் உடைகள், குறிப்பாக உங்கள் ப்ரா, பல்வேறு காரணங்களுக்காக இரவில் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கலாம். சிலர் இரவில் ப்ரா அணிவது பொருத்தமானது என்று நம்புகிறார்கள், மற்றவர்கள் அப்படி எதுவும் இல்லை என்று நம்புகிறார்கள். தூங்கும் போது ப்ராவைப் பயன்படுத்துவது பற்றி பல கருத்துக்கள் உள்ளன.

படுக்கைக்கு அல்லது நீண்ட நேரத்திற்கு ப்ரா அணிவது என்பது தோலின் துளைகளை மூடுவதன் மூலம் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும். இதன் விளைவாக நச்சுகள் மற்றும் வியர்வை உருவாகிறது, இது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆனால் இந்த கருத்தை பிரபல புற்றுநோய் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மறுக்கப்பட்டுள்ளன.

தாய்ப்பாலின் குறைபாடு, முதுமை, பரம்பரை, குழந்தைப்பேறு இல்லாமை, குறிப்பிட்ட உணவு முறை, உடல் பருமன், குறிப்பிட்ட ஹார்மோன்களின் அதிகரிப்பு ஆகியவற்றால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. ப்ரா அணிவது மார்பக புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல் பிரா அணிவதுதான் மார்பக புற்றுநோய் ஏற்பட காரணம் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

ப்ரா அணிவது மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், உங்கள் ப்ரா வசதியாக இருப்பதை உறுதிசெய்வது அவசியமானது. ஆனால் பிரா அணிவதால் புற்றுநோய் ஏற்படும் என்பது மருத்துவரின் உண்மை அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இல்லாத ஒரு தெளிவில்லாத கோடு. இதன் விளைவாக, மார்பகப் புற்றுநோயின் அபாயத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், விரைவில் மருத்துவரை அணுகவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment