scorecardresearch

கீழ் முதுகு வலிக்கு என்ன காரணம்? சரி செய்ய ஃபிட்னெஸ் எக்ஸ்பர்ட் டிப்ஸ்

கீழ் முதுகுவலியைக் குறைக்க அல்லது விடுபட உதவும் 4 குறிப்புகள் இங்கே உள்ளன!

lower back pain
Exercise for lower back pain

துரதிர்ஷ்டவசமாக பெரியவர்களுக்கு, அதிலும் குறிப்பாக நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு கீழ் முதுகுவலி பொதுவானது. ஃபிட்னெஸ் எக்ஸ்பர்ட் மற்றும் பைலேட்ஸ் நிபுணருமான நம்ரதா புரோஹித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது முதுகுவலிக்கு என்ன காரணம் என்பதை ஆராய்கிறது.

கீழ் முதுகுவலியைக் குறைக்க அல்லது விடுபட உதவும் 4 குறிப்புகள் இங்கே உள்ளன!

*கீழ் முதுகுவலியின் முதல் விஷயம் நமது தோரணை தான். மோசமான நிலையில் உட்காருவது நமது முதுகெலும்புக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் வலியை ஏற்படுத்தும். ஐசோமெட்ரிக் ஸ்ட்ரென்ட் டிரெயினிங் செய்வதன் மூலம் இதை சரி செய்யலாம் என்கிறார் நம்ரதா. Planks முதுகெலும்பு உறுதிப்படுத்தலுக்காக தசைகளை செயல்படுத்தும் மிகவும் பயனுள்ள பயிற்சியாகும்.

சர்வதேச அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட கௌதம் குப்தா மற்றும் மயங்க் அலோக் ஆகியோரின் 2021 ஆய்வில், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், முதுகுவலியைக் குறைப்பதற்கும் பிளாங்க் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளது.

*நமர்தாவின் அடுத்த உதவிக்குறிப்பு வயிறு மற்றும் முக்கிய தசைகளை வலுப்படுத்துவதாகும். இது உங்கள் முதுகுத்தண்டின் அழுத்தத்தையும் உயர்த்துகிறது, என்று நிபுணர் பகிர்ந்து கொள்கிறார்.

*கீழ் முதுகில் வலிக்கு மூன்றாவது காரணம் கடினமான இடுப்பு. கடினமான இடுப்பு முதுகுவலிக்கு வழிவகுக்கும், என்று நம்ரதா கூறுகிறார். சுழற்சி இயக்கம் இல்லாமை மற்றும் உங்கள் இடுப்பை முன்னோக்கி அல்லது பின்னோக்கி வளைக்கும் அல்லது நீட்டிக்கும் திறன் ஆகியவை உங்கள் நடை மற்றும் ஓட்டத்தை பாதிக்கலாம். ஒவ்வொரு இயக்கமும் உங்கள் கீழ் முதுகில் அழுத்தத்தை அதிகரிக்கும். உங்கள் இடுப்பை வலுப்படுத்த, சாய்ந்திருக்கும் புறா போஸ் அல்லது படுத்திருக்கும் குழந்தையின் போஸ் போன்ற பயிற்சிகள் சிறந்தவை.

*கடைசி குறிப்பு நமது குளுட் தசைகளை (glute muscles) பலப்படுத்துவது. குளுட் தசைகள் இடுப்பின் முக்கிய நிலைப்படுத்திகள் மற்றும் கீழ் முதுகை ஆதரிக்க உதவுகின்றன. இந்த தசைகள் பலவீனமாக இருக்கும்போது, ​​உடலை உறுதிப்படுத்த உங்கள் முதுகில் உள்ள தசையைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அதிகமாக ஈடுசெய்கிறீர்கள். இது கீழ் முதுகில் அழுத்தத்தையும் சேர்க்கிறது. இந்த தசைகளை வலுப்படுத்த பிரிட்ஜ் போஸ் ஒரு சிறந்த போஸ் என்று அவர் கூறுகிறார்.

எனவே இந்த பயிற்சிகளை தினமும் செய்து கீழ் முதுகு வலிக்கு குட்பை சொல்லுங்கள். இருப்பினும், நீங்கள் நாள்பட்ட முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Health exercise for lower back pain workout tips