கருத்தடை மாத்திரைகள் கருவுறுதலில் தலையிடுகிறதா? நிபுணர் சொல்வது என்ன?

குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், மகப்பேறு மருத்துவர் ப்ரீத்தி ரஸ்தோகி, ஆண்கள் மற்றும் பெண்களிடையே கருவுறுதல் பற்றிய சில கட்டுக்கதைகளை உடைத்தார்.

குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், மகப்பேறு மருத்துவர் ப்ரீத்தி ரஸ்தோகி, ஆண்கள் மற்றும் பெண்களிடையே கருவுறுதல் பற்றிய சில கட்டுக்கதைகளை உடைத்தார்.

author-image
WebDesk
New Update
lifestyle

Expert debunks five myths related to infertility

கருவுறாமை என்பது ஒரு வருடத்திற்குப் பிறகும், கர்ப்பம் தரிக்க முயற்சித்த பிறகும், இயற்கையான முறையில் ஒரு தம்பதியர் கருத்தரிக்க இயலாமை ஆகும். நமது ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் இது வேகமாக வளர்ந்து வரும் பிரச்சனையாக இருந்தாலும், அதைச் சுற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால், அறிகுறிகளைக் கண்காணிப்பதன் மூலம் இதை சிறு வயதிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

Advertisment

இது எவ்வளவு சீக்கிரம் கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் குணப்படுத்த முடியும், என்று கொல்கத்தாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சுதீப் பாசு, இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான முந்தைய உரையாடலில் தெரிவித்தார்.

குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், மகப்பேறு மருத்துவர் ப்ரீத்தி ரஸ்தோகி, ஆண்கள் மற்றும் பெண்களிடையே கருவுறுதல் பற்றிய சில கட்டுக்கதைகளை உடைத்தார்.

கட்டுக்கதை: இது எப்போதும் ஒரு பெண்ணின் தவறுதான்.

உண்மை

ஆண் மற்றும் பெண் இருவரிடையும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் காரணிகள் உள்ளன. பெண்கள் மட்டுமே எப்போதும் பொறுப்பாளிகள் அல்ல.

Advertisment
Advertisements

கட்டுக்கதை: கருவுறுதல் என்பது ஒரு பெண்ணின் வயதுடன் நேரடியாக தொடர்புடையது.

உண்மை

இது பெண்களின் வயது மட்டுமல்ல, ஆண்களின் வயதும் கருவுறுதலை பாதிக்கிறது. ஆண்கள் 40 வயதுக்கு மேல் ஆகும்போது, ​​அது விந்தணுவின் அளவு மற்றும் விந்தணு இயக்கத்தை பாதிக்கிறது.

publive-image
உங்கள் ஆரோக்கியம் நிச்சயமாக உங்கள் கருவுறுதலை பாதிக்கிறது

கட்டுக்கதை: மருத்துவ உதவியை நாடுவதற்கு முன் நீங்கள் குறைந்தது ஒரு வருடமாவது கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும்

உண்மை

ஒரு தம்பதியினர் ஆரோக்கியமாகவும், அவர்களின் வயது 35க்கும் குறைவாகவும் இருந்தால், அவர்களை 1 வருடத்திற்கு கருத்தரிக்க முயற்சி செய்ய அனுமதிக்கிறோம்.

ஆனால், பிசிஓஎஸ், எண்டோமெட்ரியோசிஸ், ஒழுங்கற்ற மாதவிடாய் வரலாறு அல்லது வயது 35 க்கு மேல் இருந்தால், 6 மாதங்களுக்கு முயற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் இன்னும் கர்ப்பம் தரிக்க முடியாவிட்டால், மருத்துவ உதவியை நாடுங்கள், என்று மருத்துவர் அறிவுறுத்தினார்.

கட்டுக்கதை: கருத்தடை மாத்திரைகள் கருவுறுதலில் தலையிடுகின்றன

உண்மை

பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, என்று மருத்துவர் ரஸ்தோகி கூறினார், இது சுழற்சியை முறைப்படுத்தவும் கருப்பை நீர்க்கட்டிகளுக்கு சிகிச்சையளிக்கவும் பரிந்துரைக்கப்படலாம். இந்த மருந்துகள் கருவுறுதலில் தலையிடாது. உண்மையில், அவை சுழற்சியை சீராக்க உதவுகின்றன. இவற்றை உட்கொள்வதை நிறுத்தியவுடன், பெண்கள் கருத்தரிப்பதற்குத் தயாராகிவிடுவார்கள்.

கட்டுக்கதை: உங்கள் ஆரோக்கியம் உங்கள் கருவுறுதலை பாதிக்காது

உண்மை

உங்கள் ஆரோக்கியம் நிச்சயமாக உங்கள் கருவுறுதலை பாதிக்கிறது. உங்களுக்கு ஏற்கெனவே உடல் கோளாறு இருந்தால் அல்லது வழக்கமான பிஎம்ஐ விட அதிகமாக இருந்தால் அல்லது உட்கார்ந்த வாழ்க்கை முறை இருந்தால், உங்கள் கருவுறுதல் பாதிக்கப்படும் என்று நிபுணர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: