இந்த ஆண்டு நீங்கள் திட்டமிட்டபடி உற்சாகமாக இல்லாமல், தினசரி தாமதமாக விழித்து, தாமதமாக அலுவலகம் செல்வது எனக் கடந்திருக்கலாம். ஆனால், 2025 உங்கள் வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் நினைத்தால் இதனை பயனுள்ளதாக, ஆற்றல் மிக்கதாக, ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும்.
நாம் நினைத்ததை சாத்தியப்படுத்த வேண்டுமானால், அதற்காக நம் வாழ்க்கை முறையை சற்று சீரமைக்க வேண்டும். இதற்காக சில அறிவுரைகளை, ஹோமியோ அமிகோ தலைமை செயல் இயக்குநர் கரன் பார்கவா பரிந்துரைத்துள்ளார்.
1. உங்களுக்கான உகந்த நேரத்தில் விழியுங்கள்: சீரான அளவில் ஓய்வு எடுத்து, உங்களுக்கான உகந்த நேரம் என்னவென்று அறிந்து சரியாக விழிக்கும் பழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்: நீங்கள் விழித்தவுடன் தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். இது உங்களின் உடலில் உள்ள நீர்ச்சத்தை உறுதிப்படுத்தும்.
3. உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்: காலை நேர உடற்பயிற்சி உற்சாகத்தை வழங்குவதுடன், அன்றைய நாளின் பணிகளுக்காக நம்மை தயார்படுத்திக் கொள்ள உதவும்.
4. தியானம் செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்: தியானம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சில நிமிட தியானம், மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
5. அன்றைய நாள் குறித்து திட்டமிடுங்கள்: அன்றைய தினம் முழுவதும் நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முன்னதாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
6. சத்தான காலை உணவை சாப்பிடுங்கள்: ஊட்டச்சத்துகள் நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்வதற்கு மறந்து விடாதீர்கள்.
7. அலாரம் அடித்தவுடன் விழித்துக் கொள்ளுங்கள்: அலாரம் அடித்த உடன் ஸ்னூஸ் செய்யாமல், உடனடியாக விழித்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
8. விழித்தவுடன் செல்போன் பார்ப்பதை தவிர்த்திடுங்கள்: காலை எழுந்த உடனேயே செல்போனை பார்க்கும் பழக்கம் இருப்பவராக இருந்தால், அந்த பழக்கத்தை கைவிடுங்கள்.
9. நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அல்லது நீங்கள் நன்றி செலுத்த வேண்டிய செயல்களை நினைவு கூர்ந்து நேர்மறையான கண்ணோட்டத்தை வளரச் செய்யுங்கள்.
10. முக்கிய பணிகளை முதலில் மேற்கொள்ளுங்கள்: நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் பணிகளை உடனடியாக செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“