துவர்ப்புச் சுவை மிகுந்த நெல்லிக்காய் மற்ற காய்களை விடவும் சிறிதாக இருந்தாலும் சத்து நிறைந்தது. நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்டவை இருக்கிறது.
Advertisment
நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது என்பது பழமொழி. அந்த பழமொழியை அப்படியே மாற்றி வேண்டி கூற வேண்டுமானால், தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை இருக்காது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணமூர்த்தி.
ஆனால் எப்படி சாப்பிட வேண்டும்?
Advertisment
Advertisements
பெரிய நெல்லிக்காய்யை பச்சையாக கடித்து சாப்பிடும் போது நம் பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்துவிடும். அதனால் நெல்லிக்காய் உடன் கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம்.
இதை அழுத்தும்போது 8 துண்டுகள் வரும். அல்லது அதன் அளவை பொறுத்து 6 துண்டுகள் வரும். அதில் ஒன்றிரண்டு துண்டுகள் எடுத்து சாப்பிடலாம். சர்க்கரையில் ஊறப்போட்ட நெல்லிக்காய் உடலுக்கு நல்லது கிடையாது.
நெல்லிக்காய் சிறிய அளவில் எடுக்கும் போதுதான் அதன் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உடம்பில் சேரும், என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணமூர்த்தி.