தைராய்டு நோய்கள் உலகளவில் மிகவும் பொதுவான நாளமில்லா கோளாறுகளில் (endocrine disorders) ஒன்றாகும். இந்தியாவிலும், தைராய்டு நோயால் கண்டறியப்பட்டவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
புள்ளிவிவரங்களின்படி, ஏறத்தாழ 32 சதவீத இந்தியர்கள், ஹைப்பர் தைராய்டிசம், தைராய்டிடிஸ் மற்றும் தைராய்டு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான தைராய்டு கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்திய தைராய்டு சொசைட்டி நடத்திய கணக்கெடுப்பின்படி, ஆண்களை விட பெண்களிடையே ஹைப்போ தைராய்டிசம் அதிகம் காணப்படுகிறது.
கழுத்தின் அடிப்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சுரக்கிறது. ஒரு செயலற்ற தைராய்டு சுரப்பி ஹைப்போ தைராய்டிசத்திற்கு வழிவகுக்கும் அதே வேளையில், தைராய்டு ஹார்மோனின் அதிகப்படியான உற்பத்தி ஹைப்பர் தைராய்டிசத்தை ஏற்படுத்துகிறது.
தைராய்டு சுரப்பி ஏன் செயலிழக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதன் மூல காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம்இந்த நிலைமையை கவனிக்க முடியும்.
தைராய்டு நோயால் கண்டறியப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும், இதை அவர்களின் தலைவிதியாகக் கருத வேண்டும், என்று குடல் சுகாதார நிபுணர் ஸ்மிருதி கோச்சார் கூறினார்.
இருப்பினும், உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், உங்கள் உயிர் வேதியியலுக்குப் பின்னால் உள்ள அறிவியலையும் நீங்கள் புரிந்து கொண்டால், தைராய்டு கோளாறுகள் உட்பட பல சிக்கல்களை நல்ல நிலைக்கு கொண்டு வரலாம், என்று அவர் கூறினார்.
மேலும் தைராய்டு செயலிழப்புக்கான பொதுவான காரணங்களை ஸ்மிருதி மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
* தன்னுடல் எதிர்ப்பு சக்தி: இது உடலுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியாகும், அங்கு நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் தைராய்டு சுரப்பியைத் தாக்கத் தொடங்குகிறது. பெரும்பாலான மக்கள் இதைப் பரிசோதிப்பது கூட இல்லை. அவர்களுக்கு ஹாஷிமோடோ நோய் (Hashimoto’s disease) அல்லது கிரேவ்ஸ் நோய் (Graves’ disease) எனப்படும் தன்னுடல் எதிர்ப்பு நிலை இருக்கலாம் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.
* கன உலோகங்களின் வெளிப்பாடு மற்றும் அதிக புளோரைடு பயன்பாடு. ஃவுளூரைடு உடலில் உள்ள அயோடினுடன் போட்டியிட்டு அதைக் குறைக்கிறது.
* மன அழுத்தத்துடன் இணைந்த குடல் அழற்சி, அல்லது தொற்றுகள். T4 ஹார்மோனின் 20% குடலில் உற்பத்தி செய்யப்படுகிறது, அது சமநிலையை மீறுகிறது!
*உங்கள் தைராய்டு சுரப்பி சரியான செயல்பாட்டிற்குத் தேவையான போதுமான ஊட்டச்சத்துக்களை உண்ணாமல் இருப்பது. குறிப்பாக சைவ உணவு உண்பவர்கள்!

மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தைராய்டு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என புது தில்லி டாக்டர் ஷோபா குப்தா கூறினார்.
பிற காரணங்கள் பின்வருமாறு:
அயோடின் குறைபாடு அல்லது அதிகப்படியான அயோடின்
ஹாஷிமோட்டோ தைராய்டிடிஸ் (Hashimoto’s thyroiditis)
பிரசவத்திற்குப் பிந்தைய தைராய்டிடிஸ் (Postpartum thyroiditis)
முடிச்சுகள் (Nodules)
டாக்டர் குப்தாவின் கூற்றுப்படி, எடை அதிகரிப்பு, சோர்வு, மலச்சிக்கல், தசை மற்றும் மூட்டு வலிகள், மந்தமான தன்மை, குளிர் காலநிலைக்கு சகிப்புத்தன்மையின்மை, அசாதாரணமான மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் தூக்கமின்மை ஆகியவை தைராய்டின் பொதுவான அறிகுறிகள். மேலும் தோல் வறண்டு தடிமனாக மாறக்கூடும். முடி கரடுமுரடான அல்லது மெல்லியதாக இருக்கலாம். சில சமயங்களில், புருவங்கள் மறைந்து நகங்கள் உடையக்கூடியதாக மாறும், என்றார் டாக்டர் குப்தா.
நோய் கண்டறிதல்
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், உடனடியாக TSH (thyroid stimulating hormone) சோதனை, மார்பு எக்ஸ்ரே, T4 அல்லது தைராக்ஸின் சோதனை செய்யவும்.
சிகிச்சை
ஹைப்பர் தைராய்டிசம் பல வழிகளில் சிகிச்சையளிக்கப்படலாம். இருப்பினும், ஹைப்பர் தைராய்டிசத்தின் அடிப்படைக் காரணம், நோயாளியின் வயது, தைராய்டு சுரப்பியின் அளவு மற்றும் ஏற்கெனவே இருக்கும் நோய்களின் அடிப்படையில் ஒரு மருத்துவர் சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்கிறார் என்று டாக்டர் குப்தா தெளிவுபடுத்தினார்.
உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் இருப்பது கண்டறியப்பட்டால், தைராய்டு ஹார்மோன் ரிபிளேஸ்மெண்ட் (thyroid hormone replacement) கருவுறுதலை மீட்டெடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மருந்து மூலம் உங்கள் தைராய்டு ஹார்மோன் அளவை சீராக்க 1-2 மாதங்கள் ஆகலாம்; நீங்கள் மருந்தை ஆரம்பித்தவுடன், உங்கள் TSH அளவுகள் சாதாரண வரம்பில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த நீங்கள் சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மேலாக உங்கள் தைராய்டு செயல்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்று டாக்டர் குப்தா கூறினார்.
சரியான நேரத்தில் நோயறிதலுடன், டாக்டர் குப்தா, போதுமான ஓய்வு, உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரைக்கிறார், இது முழு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“