நமது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால்.
மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள் நகரும்போது ஒன்றோடொன்று உராயாமலிருக்க அந்தப் பகுதியில் மூட்டு சவ்வில் இருந்து ஒருவித திரவம் சுரக்கும். இந்த சவ்வு வீங்கும்போதோ, குறுத்தெலும்பு சேதமாகி ஓட்டை விழும்போதோ, அதைத் தேய்மானம் என்கிறோம். அதனால் உராய்வு அதிகமாகிறது. அசைவு குறைகிறது. அதனால் கால்களை நீட்டி, மடக்குவது கடினமாகிறது.
முழங்கால் மூட்டு பாதிப்பு வந்துவிட்டால் முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தால், மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு முழங்கால் வலி வரும். சரியான சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்தால் எடை கட்டுக்குள் இருக்கும். கால் வலியும் குறையும்.
ஃபிட்னெஸ் எக்ஸ்பர்ட் நம்ரதா புரோஹித் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில், முழங்கால் உறுதியாக உதவும் உடற்பயிற்சிகளை பகிர்ந்துள்ளார்.
பாருங்க
குறிப்பு: மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பயிற்சிகள் சில உள்ளன. மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையோடு தகுந்த பயிற்சிகளை மட்டும் செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“