உண்மையில், உங்கள் அன்றாட வழக்கத்தில் சில எளிய மாற்றங்களைச் செய்வது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற ஒரு எளிய உதவிக்குறிப்பைப் பகிர்ந்து கொண்ட பிரபல யோகா நிபுணரான அன்ஷுகா பர்வானி, தூங்கச் செல்லும் முன் சுவரில் கால்களை வைக்குமாறு பரிந்துரைத்தார்.
இது கால்கள், பாதங்கள், இடுப்புகளில் இருந்து அழுத்தம் மற்றும் சோர்வைப் போக்க ஒரு சிறந்த போஸ் ஆகும். மேலும், இது இதயத் துடிப்பைக் குறைக்கிறது, இது உடலைத் தளர்த்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்யும் போது ஆழமாக சுவாசிக்க வேண்டும், உங்கள் உடல் இலகுவாகவும் அமைதியாகவும் இருப்பதை நீங்கள் உணருவீர்கள்.
ஆனால் இந்த போஸ் எதைப் பற்றியது?
ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியாளர் ஜிக்யாசா குப்தா கூறுகையில், இது ‘விப்ரித் கர்னி’ ஆசனம். தூங்குவதற்கு முன் பயிற்சி செய்தால், அது உடல் மற்றும் மனதைத் தளர்த்துவதற்கு உதவியாக இருக்கும், இதன் விளைவாக நல்ல தூக்கம் கிடைக்கும்.
இந்த ஆசனம் கால் மற்றும் பாதங்களில் வலியை போக்கவும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும், கால்கள், பாதங்கள் மற்றும் இடுப்புகளில் இருந்து அழுத்தம் அல்லது சோர்வைப் போக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும் என்றும் அவர் கூறினார்.
தினமும் இதை செய்தால், அது மன அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த சுழற்சியை மேம்படுத்தவும், கீழ் முதுகுவலியைக் குறைக்கவும் உதவும்.
விப்ரித் கர்னி ஆசனத்தின் ஆரோக்கிய நன்மைகள்
உங்கள் கால்களை சுவரில் வைப்பதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள். அவை:
இது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்தி, கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.
தோள்கள், கழுத்து மற்றும் கீழ் முதுகில் உள்ள அழுத்தம் மற்றும் இறுக்கத்தை போக்க இந்த போஸ் உதவும் என்று ஒரு சிறிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
இது குடல் இயக்கத்தை மேம்படுத்தும் மற்றும் மலச்சிக்கல் அறிகுறிகளை குறைக்க உதவும்.
இந்த போஸ் தளர்வு அளித்து மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், மனதை அமைதிப்படுத்தவும் உடலை தூக்கத்திற்கு தயார்படுத்தவும் உதவும். கூடுதலாக, தலைகீழ் நிலையில் இருக்கும் போது மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம் தூக்கத்தில் குறுக்கிடக்கூடிய அசௌகரியம் அல்லது அமைதியின்மையைக் குறைக்க உதவும்.
விப்ரித் கர்னி ஆசனம் செய்யும் போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் அகர்வால் பகிர்ந்துள்ளார். அவை:
1. உயர் ரத்த அழுத்தம், கிளௌகோமா அல்லது உங்கள் கழுத்து அல்லது முதுகுத்தண்டில் ஏதேனும் பிரச்சனைகள் போன்ற ஏதேனும் மருத்துவ நிலைமைகள் இருந்தால், இந்த ஆசனத்தை முயற்சிக்கும் முன் உங்கள் சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது அவசியம்.
மெதுவாகத் தொடங்கி உங்கள் உடலைக் கவனியுங்கள். நீங்கள் ஏதேனும் அசௌகரியம் அல்லது வலியை உணர்ந்தால், போஸில் இருந்து விடுபடுங்கள் அல்லது கீழ் முதுகில் ஒரு குஷன் அல்லது போர்வையை வைத்து உங்கள் இடுப்புகளின் உயரத்தை சரிசெய்யவும்.
கால்கள், இடுப்பு அல்லது கீழ் முதுகில் ஏதேனும் காயங்கள் அல்லது வீக்கம் இருந்தால் இந்த போஸைத் தவிர்க்கவும்.
போஸில் இருக்கும்போது உங்கள் சுவாசத்தை மெதுவாகவும் சீராகவும் வைத்திருங்கள், மேலும் உங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.
மாதவிடாய் அல்லது கர்ப்ப காலத்தில் முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யாதீர்கள்.
இந்த போஸைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால், அதை நீங்கள் முயற்சிக்கும் முன், தகுதிவாய்ந்த யோகா ஆசிரியரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவது எப்போதும் சிறந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”