நோய் எதிர்ப்பு சக்தி: சிவப்பு அரிசி ஏன் அவசியம் தெரியுமா?

Health benefits of red rice : ஆன்டி ஆக்சிடண்ட் பண்புகள் இருப்பதால், பிரவுன் அரிசியை விட, சிகப்பு அரிசியே அதிக ஊட்டச்சத்து நிறைந்தது.

By: July 18, 2020, 7:36:13 AM

Health News In Tamil: இன்றைய நவநாகரீக உலகில் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை, உணவுமுறை உள்ளிட்டவைகளை மேற்கொள்ள அதிகம் மெனக்கெடுகின்றனர். மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டும், பலர் இயற்கையான முறையில் தங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வருகின்றனர். சிலர் உணவுமுறைகளை மாற்றியமைப்பதன் மூலம் திடமான உடல் பெற்று வருகின்றனர். உணவுமுறையின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்களின் சரியான தேர்வு சிகப்பு அரிசியாகத்தான் இருக்க வேண்டும்.

சிகப்பு அரிசி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்

இந்தியாவில் மிக முக்கிய உணவுப்பொருளாக வெள்ளை அரிசி விளங்கி வருகிறது. சில மாநிலங்களில் வெள்ளை அரிசிக்கு பதிலாக சிகப்பு அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிகப்பு அரிசி என்பது வெள்ளை அரிசியின் பாலீஷ் செய்யப்படாத வகை. இதில் மிகுந்த சத்து உள்ளது.
அரிசியில் பிரவுன், சிகப்பு என அவற்றின் நிறத்தைக்கொண்டு அரிசிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிகப்பு அரிசியில், அரிசி சிகப்பாக இருப்பதற்கு அதற்குள் உள்ள ஆந்தோசயனின் நிறமியே காரணம். ஆந்தோசயனின் நிறமிக்கு ஆன்டி ஆக்சிடண்ட் பண்புகள் இருப்பதால், பிரவுன் அரிசியை விட, சிகப்பு அரிசியே அதிக ஊட்டச்சத்து நிறைந்தது.

சிகப்பு அரிசியில் உள்ள பிளேவனாய்டுகள், உடலுக்கு தேவையான உறுதியை அளிப்பதோடு மட்டுமல்லாது, நீண்டநேரம் உற்சாகமாக இருப்பதற்கும் காரணமாக அமைகிறது. இந்த அரிசியை பயன்படுத்துவதால், நமது உடலில் உள்ள செல்கள், வீக்கம் உள்ளிட்ட அலர்ஜிக்கு காரணமான ஆன்ட்டிஜென்களுடன் திறம்பட போரிட்டு நம்மை, உடல்நலக்குறைவுகளிலிருந்து பாதுகாக்கிறது.

நீரிழிவு உள்ளவர்கள் அல்லது தங்களுக்கு வந்துவிடும் என்று பயப்படுபவர்கள், அரிசி உணவை பெருமளவு தவிர்த்து விடுகின்றனர். அப்பேற்பட்டவர்களும், மருத்துவர்களின் தக்க ஆலோசனைப்படி, சிகப்பு அரிசியை பயன்படுத்தலாம். ஏனெனில், சிகப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை தூண்டுவதோடு மட்டுமல்லாது, உடலின் வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது.

சிகப்பு அரிசியில் என்னென்ன செய்யலாம்?

நாம் வெள்ளை அரிசியில் செய்யும் உணவு பதார்த்தங்களை போன்றே, சிகப்பு அரிசியிலும் அனைத்துவகை பதார்த்தங்களையும் செய்யலாம்.
சிகப்பு அரிசியை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. மருத்துவரின் அறிவுரைப்படி, நமது உடலுக்கு எது ஏற்றதோ அதை நமது உணவுமுறையாக ஏற்றுக்கொள்வதே சாலச்சிறந்தது ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Hrealthy life healthy food red rice what is red rice health benefits of red rice

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X