ஸ்லிம் ஆவது எப்படி? உங்கள் சமையலறையில் இருக்குது ரகசியம்!

Health News In Tamil: டிடாக்ஸ் என்பது ஒரு வகை உண்ணாவிரதம் போன்றது, குறிப்பிட்ட உணவுகளை உண்ணுதல் மற்றும் அதிக கலோரி உணவுகளை தவிர்ப்பது ஆகும்.

By: January 6, 2021, 7:53:04 AM

Health News In Tamil: “இந்த புதிய ஆண்டில் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், உடல் பருமனை குறைத்து ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்றும் உறுதி செய்திருப்பீர்கள். அப்படி உடல் எடையயை குறைக்க நீங்கள் செய்ய வேண்டியது டிடாக்ஸ்.

டிடாக்ஸ் என்பது ஒரு வகை உண்ணாவிரதம் போன்றது, குறிப்பிட்ட உணவுகளை உண்ணுதல் மற்றும் அதிக கலோரி உணவுகளை தவிர்ப்பது ஆகும்” என புனேவைச் சேர்ந்த உணவு நிபுணர்  நீலிமா நிதின் கூறுகின்றார்.

” குறைந்த அளவு உணவு உண்பதன் மூலம் உங்கள் எடையை கண்டிப்பாக குறைக்கலாம். அந்த உணவு நார்சசத்து உள்ள உணவாக இருக்க வேண்டும். மதிய உணவு நேரத்தில் ஒரு கிண்ணம் சாலட் மற்றும் இரவு உணவுவில்  ஒரு கிண்ணம் சூப் என உணவை குறைப்பது உங்கள் எடையை கண்டிப்பாக குறைக்கும். அதோடு இந்த உணவை இரவு நேரத்தில் சேர்த்து கொண்டால் எடை வெகுவாக குறையும், மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்” என நீலிமா குறிப்பிடுகின்றார்.

நச்னி சி உகாத்

‘நச்னி சி உகாத்’  இதை ராகி அல்லது கேப்பையில் செய்யப்படும் ஓர் வகை உணவு ஆகும். இதில் நார்ச்சத்து நிறைந்த காணப்படுகின்றது.  ஆதலால்  எடை இழப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கு உதவுகிறது. இது கால்சியம், கார்ப்ஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் இரும்பு ஆகியவற்றால் நிரம்பியுள்ளது, இது எடை இழப்பு தவிர பலவீனமான எலும்புகள் மற்றும் இரத்த சோகைக்கு எதிராக போராட உதவுகிறது. ஜீரணிக்க எளிதானது என்பதால் இதை  குழந்தைகளுக்கும் வழங்கலாம்.

 

 

தேவையானவை

1 கப்   –     ராகி மாவு (கேப்பை மாவு) ,
1 பெரிய கிண்ணம் புளிப்பான மோர் , சீரகம், பச்சை மிளகாய், பூண்டு
கிராம்பு –  தேவையான அளவு
3-4 இலைகள்   -கறிவேப்பிலை
2 டீஸ்பூன் – நெய்,
உப்பு மற்றும் நீர் தேவையான அளவு.

நீங்கள் செய்ய வேண்டியது

முதலில் ராகி மாவை மோரில் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயை சூடாக்கி, நெய் சேர்த்து நொறுக்கப்பட்ட பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் வதக்க வேண்டும் . கறிவேப்பிலை இலைகளை சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். வதக்கியதை வாணலியில்  ஊற்றவும். மாவை விரல்களால் நைசாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால்  கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம்.  இப்போது தயாரானதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் கொத்தமல்லி மற்றும் நெய் ஆகியவற்றை தூரா வேண்டும்.

 

 

 

சாம்பல் பூசணிக்காய்:

தேவையானவை:

பூசணிக்காய்  – நறுக்கப்பட்டது  1 கிண்ணம்
ஒரு கட்டு  செலரி தண்டுகள்
கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி
தேங்காய் பால் / சாறு – 1 கப் அல்லது தேவையான அளவு
தண்ணீர்
உப்பு

நீங்கள் செய்ய வேண்டியது

சாம்பல் பூசணிக்காய் மற்றும் நறுக்கிய செலரி தண்டுகள் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர்  கருப்பு மிளகு மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் தேங்காய் பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.  பிறகு அதன் மேல்  சிறிது தேங்காய் பால், கருப்பு மிளகு சேர்க்க வேண்டும். இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சாம்பல் சுண்டைக்காய் தயாராக இருக்கும்.

 

 

 

 

கொள்ளு  சூப்

தேவையானவை

கொள்ளு – 3 முதல் 4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்  -1 தேக்கரண்டி
இஞ்சி – 1 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்
நெய் / தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்
துண்டு துண்தாக வெட்டப்பட்ட பூண்டு – இரண்டு
பச்சை மிளகாய் – 1 அல்லது இரண்டு
கறிவேப்பிலை மற்றும் புதிய கொத்தமல்லி
பெருங்காயம் – ஒரு துளி அளவு
எலுமிச்சை – 1நீங்கள் செய்ய வேண்டியதுகுறைவான  வெப்பத்தில் வைத்து கொள்ளு பயறை நன்றாக வறுக்கவும். அதில் சிறிதளவு  பெருஞ்சீரகம்  சேர்த்து கருக்காத அளவுக்கு வறுக்க வேண்டும். இவை இரண்டையும் இஞ்சியுடன் சேர்த்து நன்றாக பொடியாக அரைக்க வேண்டும். இது சூப்பின் பேஸ் ஆக உபயோகப்படுத்தலாம். இதை  பொடியாக வைத்து விரும்பும் போதெல்லாம் சூப்வுடன் சேர்த்து அருந்தலாம்.

இப்போது சூப் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி, சீரகத்தை சேர்த்து வதக்கவும். பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அதோடு ஒரு துளி அளவு பெருங்கயம் சேர்க்க வேண்டும். பின்னர்   தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். நன்றாக அரைக்கப்பட்ட பொடியில்  சிறிது தண்ணீரில் கலந்து வாணலியில் சேர்க்க வேண்டும். சூப்பை  சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு பிழிய வேண்டும். அதன் மேற்புறமாக கொத்தமல்லி  இலைகளை தூவவும். இப்போது நீங்கள்  விரும்பிய  கொள்ளு  சூப் கிடைக்கும்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:How to get slim and fit its in your kitchen

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X