நம்மில் பலர் ஒவ்வொரு புதிய நாளையும் காபி அல்லது டீயுடன் தான் தொடங்குகிறோம். வழக்கமாக வீட்டில் எப்போதும் இருக்கும் டீ தூள் பயன்படுத்தி தான், சுவையான தேநீர் தயாரிப்போம். ஆனால் இப்போது பெரிய கார்பிரேட் நிறுவனங்கள் உட்பட வீடுகளிலும் கூட, டீ பேக்ஸ் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். கொஞ்சம் டீ குடிக்க வேண்டுமென்றால், உடனே ஒரு டம்ளரில் வெந்நீர் பிடித்து, அதில் டீ பேக்ஸ் போட்டு, அது மிக்ஸ் ஆனதும் ருசித்து பருகுவோம்.
உங்கள் டீ பேக் உங்களுக்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வல்லுநர்கள் சொல்வதை கேளுங்கள்.
மாண்ட்ரீலில் உள்ள McGill பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, ஒரு டீபேக், நீங்கள் குடிக்கும் தேநீரில், தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் துகள்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி, தேநீர் பைகளில் இருக்கும், இந்த தீங்கு விளைவிக்கும் நச்சுகளின் விளைவுகளைப் பற்றி இங்கு பகிர்ந்துள்ளார்.
டீ பேக்ஸ், உண்மையியில் பில்லியன் கணக்கான மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகளை. சூடான நீரில் வெளியிடுகின்றன.

பேப்பர் டீ பேக்ஸில், எபிகுளோரோஹைட்ரின் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது பை உடையாமல் இருக்க பயன்படுத்தப்படுகிறது. இது சூடான நீரில் கசிந்து, புற்றுநோய் வர சாத்தியம் ஆகிறது. ஹார்மோன் பிரச்சினைகள் உள்ள பலர் தேநீர் பைகளைப் பயன்படுத்துவதால், ஊட்டச்சத்து நிபுணர் அதை “அபாயகரமானது” என்று எச்சரித்தார்.
இதை ஒப்புக்கொண்ட உணவியல் நிபுணர் மருத்துவர் கிரண் தலால், பெரும்பாலும், தேநீர் பைகளில் டையாக்ஸின் அல்லது எபிக்ளோரோஹைட்ரின் பூச்சு இருக்கும் அல்லது அவை குளோரின் உள் வைக்கப்படுகின்றன. எனவே அது வெந்நீருடன் கலக்கும் போது, மனித உடலுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும்.
இந்த நச்சுகளின் விளைவுகளை விளக்கிய மருத்துவர் “இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது மற்றும் உடலில் சில வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும் நச்சுகள் நிறைய உள்ளன.” என்றார்.
தேயிலை பைகளுக்கு பதிலாக, தேயிலை தூள் பயன்படுத்துவதை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்க்க, துணி சார்ந்த தேநீர் பையை ஒருவர் பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் சேர்க்கைகளை படித்து பார்த்த பிறகு டீ பேக்ஸ் பயன்படுத்தலாம் என்று மருத்துவர் செளத்ரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“