Health Tamil News: தண்ணீர் உடலுக்கு அத்தியாவசிமான ஒன்று. தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறனர். இது இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகின்றது. மற்றும் உடலுக்கு பல நன்மைகளை தரும் ஒன்றாக இருக்கின்றது. ஆனால் வெறும் தண்ணீரை மட்டும் அருந்துவது சில நேரங்களில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். ஆகவே சுவையுள்ள இந்த நீரை பருகினால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் என்கிறார் உடற்ச்செயல்பாட்டு பயிற்சியாளர் விஜய் மேனன்.
சுவையான குடிநீரை தயாரிக்க தேவையான பொருட்கள்
எலுமிச்சை
இஞ்சி
புதினா இலைகள்
மிளகு
கடல் உப்பு
நீங்கள் செய்ய வேண்டியவை:
ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து அதில் எல்லா பொருட்களையும் சேர்க்க வேண்டும். பிறகு ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலக்க வேண்டும். நாம் சேர்த்த பொருட்கள் தண்ணீருடன் நன்றாக மிக்ஸ் ஆகும் வரை காத்திருக்க வேண்டும். பின்னர் வடிகட்டியோ அல்லது அப்படியே வேண்டுமாலும் பருகலாம்.
இந்த சுவையான நீரை பருகுவதால் ஏற்படும் நன்மைகள்
எலுமிச்சை:
இதில் உள்ள வைட்டமின் சி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வைரஸ் தொற்று மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுகிறது. எலுமிச்சை மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை சரி செய்வதோடு, இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்குகிறது. இது உடல் வீக்கத்தைக் குறைத்து உடலை சுத்தம் செய்கின்றது.
இஞ்சி:
இஞ்சி உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடுகின்றது. மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றது.
புதினா இலைகள்:
இவை செரிமானத்திற்கு உதவுகின்றது. மன அழுத்தத்தை குறைக்கின்றது. மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றது.
மிளகு:
மிளகு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்கின்றது. புற்றுநோயைத் தடுப்பதோடு, குடல் மற்றும் வயிற்றை சுத்தம் செய்கின்றது. உடலிலுள்ள சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. இதய துடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
கடல் உப்பு:
கடல் உப்பில் பெரும்பாலும் சோடியம் குளோரைடு அதிகமாக காணப்படுகின்றது. இது உடலில் உள்ள திரவங்களை சமநிலையில் வைக்கவும், இரத்த அழுத்தத்தை சீராக்க வைக்கவும் உதவுகின்றது. கடல் உப்பு குறைந்தபட்சமாக பதப்படுத்தப் படுகின்றது. இதில் பொட்டாசியம், இரும்பு மற்றும் கால்சியம் உள்ளிட்ட தாதுக்கள் காணப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"