உடலுக்கு வலு… தோலுக்குப் பொலிவு..! லேசுபட்டது இல்லை ஆலிவ் எண்ணெய்

Health News: ஆலிவ் எண்ணெய் உடலை ஆரோக்கியமானதாக வைப்பதோடு உடலை கட்டுப்பாட்டோடு வைக்கவும் உதவுகின்றது.

Health Tamil News: ஆலிவ் எண்ணெய் பல மூலப் பொருள்களை உள்ளடக்கிய ஒரு எண்ணெய் ஆகும்.ஆலிவ் எண்ணெயை தமிழில் இடலை எண்ணெய் என்றும் அழைக்கிறார்கள்.  இது சமையல் எண்ணெய்யாகவும், மருந்தாகவும்  பயன்படுத்தபடுகின்றது. ஆலிவ் எண்ணெய்  பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிலேயே  உற்பத்தி செய்யப்படுகிறது.

உடலை ஆரோக்கியமானதாக வைப்பதோடு உடலை கட்டுப்பாட்டோடு வைக்கவும் உதவுகின்றது. தோல் மற்றும் முடிக்கு நல்ல  ஊட்டச்சத்து வழங்குகின்றது என பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் யாஸ்மின் கராச்சிவாலா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் பற்றி பதிவிட்டு இருந்தார்.

Health Tamil News, Olive Oil: ஆலிவ் எண்ணெயின் வகைகள்:

விர்ஜின் ஆலிவ்எண்ணெய் –  எந்தவொரு கலப்படமும் இல்லாத எண்ணெய் ஆகும். இது  ஆலிவ் பழங்களை  நன்றாக அழுத்தம் கொடுத்து, பிறகு அதிலிருந்து வடிக்கப்பட்ட  எண்ணெய் ஆகும். இதில் அமிலத்தன்மை குறைந்து காணப்படுகின்றது. இது சமையலில் வறுப்பதற்கான எண்ணெய்யாக பயன்படுத்தலாம்.

எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் – இந்த வகை எண்ணெய் எந்த வித முறையையும் பயன்படுத்தி பிரிக்கப்படுவது கிடையாது. இந்த எண்ணெய் உடலுக்கு வலு தருகின்றது. இந்த ஆலிவ் எண்ணெயை சாலட்களில் கலந்து சாப்பிடுவது தோல்களுக்கு பொலிவு தரும்.

தூய ஆலிவ்எண்ணெய்  –  சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய் மற்றும்  விர்ஜின் ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையே தூய ஆலிவ் எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் சமையல் செய்வதற்கு ஏற்ற எண்ணெய் ஆகும்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Health tamil news lifestyle health olive oil health benefits different types use

Next Story
போண்டா ரெசிபி… ஆனியன், உருளைக்கிழங்கு ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு!medu vadai instant medu vadai recipe
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com