ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. எனவே, இரத்த சர்க்கரை அளவுகளின் வரம்புகளைப் புரிந்து கொள்வது நீரிழிவு நோயின் சுய நிர்வாகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
Advertisment
வயது, பாலினம் எதுவாக இருந்தாலும், காலையில் எவருக்கும் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவு 100 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும். இருப்பினும், ஒவ்வொரு நபரின் ஆரோக்கியம் மற்றும் உடல் செயல்பாடு தனிப்பட்டதாக இருப்பதால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அவர்களின் உணவு, மருந்து மற்றும் பிற காரணிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது உயர் இரத்தச் சர்க்கரை ப்ரீடியாபெடிக் மற்றும் நீரிழிவு நிலைகளுடன் தொடர்புடையது.
சாதாரண சர்க்கரை அளவு 90 முதல் 100 mg/dL வரை இருக்கும். இருப்பினும், பகல் மற்றும் இரவு நேரங்களில் இது அடிக்கடி மாறுகிறது. ஆனால் சில நேரங்களில், அதிக அல்லது குறைந்த இரத்த சர்க்கரை அளவுகள், மருத்துவ கவனிப்பு தேவைப்படும் சுகாதார நிலைமைகளின் அறிகுறிகளாகும்.
வயதுக்கு ஏற்ப இரத்த சர்க்கரை வரம்பு இங்கே.
6 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள்
உணவுக்கு முன்: 100-180 mg/dL
உணவுக்குப் பிறகு 1-2 மணி நேரம் கழித்து: சுமார் 180 mg/dL
சாப்பிடாமல் இருக்கும் போது: 80-180 mg/dL
தூங்கும் போது: 110-200 mg/dL
6 முதல் 12 வயது
உணவுக்கு முன்: 90-180 mg/dL
உணவுக்குப் பிறகு 1-2 மணி நேரம் கழித்து: சுமார் 140 mg/dL
சாப்பிடாமல் இருக்கும் போது: 80-180 mg/dL
தூங்கும் போது: 100-180 mg/dL
13 முதல் 19 வயது
உணவுக்கு முன்: 90-130 mg/dL
உணவுக்குப் பிறகு 1-2 மணி நேரம் கழித்து: சுமார் 140 mg/dL
சாப்பிடாமல் இருக்கும் போது: 70-150 mg/dL
தூங்கும் போது: 90-150 mg/dL
20 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
உணவுக்கு முன்: 70-130 mg/dL
உணவுக்கு 1-2 மணி நேரம் கழித்து: 180 mg/dL க்கு கீழ்
சாப்பிடாமல் இருக்கும் போது: 100 mg/dL க்கு கீழ்
தூங்கும் போது: 100-140 mg/dL
சர்க்கரை நோய் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான சாதாரண ரத்த சர்க்கரை அளவு
கடைசி உணவுக்குப 2 மணி நேரம் பிறகு: 90 முதல் 140 mg/dL
கடைசி உணவுக்கு 2 முதல் 4 மணி நேரம் பிறகு: 90 முதல் 130 mg/dL
கடைசி உணவுக்கு 4 முதல் 8 மணி நேரம் பிறகு: 80 முதல் 120 mg/dL
இரத்தத்தில் சர்க்கரை அளவு 180 mg/dL க்கு அதிகமாக இருப்பது ஆபத்தானது. 300 mg/dL க்கும் அதிகமாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதுகாப்பான வரம்பிற்குள் பெற உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“